கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியாவுக்கு 91 குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.