காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்க வேண்டி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் காலக்கெடு முடிந்த நிலையில் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் தமிழகத்தில் மோடி வருகையை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தனது டுவிட்டரில்,

” ஐயா! வணக்கம், நான் கமல்ஹாசன்,  உங்கள் குடிமகன்... இது மாண்புகு பிரதமருக்கு நான் அனுப்பும் திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை நீங்கள் அறியாதது இல்லை. தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதி வழங்கப்பட்டு விட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும் இந்த தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்ப தொடங்கி விட்டார்கள்.

இது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். 

அது உங்கள் கடமை.  நினைவுறுத்துவது என் உரிமை. இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடிதம் வடிவில் வெளிப்படுத்துவேன். தயவு செய்து செயல்படுங்கள். இந் நிலை மாற வழி செய்யுங்கள். வாழ்க இந்தியா. நீங்களும்" என்று டுவிட்டியுள்ளார்.

கமல் மோடிக்கு எழுதிய கடிதம்....,