சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை பொலிஸார்  ஊசி வைத்து உடைத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த  முதலாம் திகதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவதாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.

மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு இலட்சணை அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பொலிஸாருக்கு தெரியாமல் மறைத்து வைத்த கருப்பு பலூன்களை அவர்கள் பறக்கவிடத் தொடங்கியதும் பொலிஸார்  ஊசி வைத்து உடைத்தனர்.