இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள காமாத்ரிபுத்ரா போன்ற சிவப்பு விளக்கு பகுதிகளில் உரிய அனுமதி பெற்று பாலியல் தொழிலில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு பொலிஸாருக்கு தெரியாமலும்  ரகசியமாக சில இடங்களில் இந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  பொலிஸார் நேற்றிரவு  தெற்கு மும்பை பகுதியில் உள்ள ஒரு விடுதிக்குள் அதிரடியாக சோதனையிட்னர்.  பல பாலியல் தொழிலாளிகள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த விடுதி பணியாளர்கள் பொலிஸார் வந்திருப்பதை மேல் மாடியில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினர்.

இதில் பதற்றமடைந்த இரு பெண்கள் மூன்றாவது மாடி அறையில் இருந்து ஒரு கயிற்றின் உதவியுடன் கீழே குதிக்க முயன்ற போது இருட்டில் பிடிநழுவி  கீழே விழுந்து காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

கீழே விழுந்து காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தவர்களை பொலிஸார் மீட்டு அருகிலுள்ள  அரச வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அதி தீவிரப்பிரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு பெண்களும்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.