எதிர்வரும் நாட்களில் சென்னையில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் அங்கு இடம்பெறப்போவதில்லையென ஐ.பி.எல். குழு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை தொடர்பான போராட்டங்கள் சென்யைில் இடம்பெற்றுவருவதால் இந்த முடிவை ஐ.பி.எல் குழு எடுத்துள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் அதன் சில போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் கடந்த 10 ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றாலும் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இப் போட்டி இடம் பெற்றது.
ஆகையினால் பாரிய சிரமங்களுக்குள்ளான ஐ.பி.எல் குழு இனிவரும் 6 போட்டிகளையும் சென்னையில் நடத்தப் போவதில்லையென முடிவெடுத்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM