துடுப்பாட்டவீரரால் ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் 8 ஓட்டங்கள் வழங்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2 ஆண்டுக்கு பின்னர் சென்னையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான உணர்வை தருகிறது.
கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம், சென்னை அணியின் துடுப்பாட்டம் இரண்டுமே குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
இப்போட்டியில் பல சிக்சர்கள் பறந்தன. துடுப்பாட்ட வீரர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 ஓட்டங்கள் (அதாவது 8 ஓட்டங்கள்) வழங்க வேண்டும்.
உணர்ச்சியின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆட்டம் பரபரப்பானதால் எனது இதயத்துடிப்பும் எகிறியது.
அதனால் தான் எங்களுக்கு ஓய்வறை ஒன்று உள்ளது. எனது உணர்ச்சிகளை ஓய்வறையில் வெளிப்படுத்துவேனே தவிர, அனைவரும் பார்க்கும் மைதானத்தின் எல்லைக்கோட்டையொட்டி வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பெரிய அளவில் காட்டமாட்டேன். இங்கு அமரும் போது குறிப்பிட்ட தருணத்தில் துடுப்பாட்ட வீரர் அல்லது பந்து வீச்சாளர் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். நேர்மறையான எண்ணங்கள் சாதிப்பதற்கு உதவும். களத்தில் நம் உணர்ச்சிகளை அதிகமாக கொட்டினால், அது நம்மை பற்றி வர்ணனையாளர்கள் பேசுவதற்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணிக்குமே பந்து வீச்சாளர்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. ஆனால் ரசிகர்கள் நிச்சயம் குதூகலம் அடைந்திருப்பார்கள் என டோனி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM