முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 24ம்; திகதி வரை  ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவருக்கு ரூபா 3.2 மில்லியனை, சட்ட விதிமுறைக்குட்படாத வகையில் வழங்கியமை தொடர்பில் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.