சட்டவிரோதமாக தங்கம் கடத்திய 3 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மூவரும் 17 கோடி ரூபா பெறுமதியான 24 கிலோகிராம் தங்கங்களை கடத்தும் போதே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கக் கடத்தலுக்காகப் பயன்படுத்திய படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.