அவுஸ்திரேலியாவில் புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து சுற்றுலா சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான டிகன்சன் என்ற இளம் பெண் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான மருத்துவ உதவி செய்ய பல இலட்சம் தேவைப் படுவதாகவும் தனக்கு உதவும் படியும் சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார்.

இதனை நம்பிய பலர் டிகன்சனது சிகிச்சைக்காக பல இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

மக்கள் வழங்கிய பணத்தை டிகன்சன் தனது கோடை விடுமுறை கொண்டாட்டத்துக்காக செலவு செய்துள்ளார்.

இது குறித்து  நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய டிகன்சனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணையில் டிகன்சன் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டமையால் அவருக்கு 3 மாதம் சிறை  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.