அல்ஜீரியாவின் தலைநகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகரில் உள்ள பௌவரிக் விமானநிலையத்தில் இராணுவ விமானமொன்று விழுந்து நொருங்கியதில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த விமானத்தில் விபத்து இடம்பெறும் போது 200 பேர் பயணித்துள்ளதாகவும்  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலையுசின் ஐ.எல்.76 என்ற விமானம் பெருமளவு படையினருடன் பெச்சார் என்ற நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விழுந்து நொருங்கிய இடத்தில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.