மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் திரைக்கதையை, அதன் இயக்குநர் இன்று சபரிமலை ஐய்யப்பன் சன்னிதானத்தில் வைத்து அவரின் ஆசியைப் பெற்றார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது,‘விக்ரம் சார் கர்ணனாக இந்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பீமனாக மலையாள சுப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். இப்படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்திலும், ஜோத்பூரிலும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன. இப்படத்தின் படபிடிப்பு ஒக்டோபர் மாதம் தொடங்குகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜட்டில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ‘மஹாவீர் கர்ணா ’ வைஅடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகிறோம்.’ என்றார்.