மதுபாவனை மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளும் குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாகின்றது. என கடந்த வாரம் பார்த்தோம். கால சூழலுக்கேற்பட்ட மாறுதல்கள் குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாக அமைகின்றது. இன்றைய கால கட்டங்களில் ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடுகள் ஏற்பட்டு வருவதால் இக்குழந்தையின்மை துறையிலே ஆண்கருத்தரிப்பு நிபுணர் என்பது சிறப்பு மருத்துவத்துறையாக வந்துள்ளது. இத்துறை இன்று மக்களிடையே மிகவும் தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள அதே வேளை புதிதாக வந்துள்ள மருத்துவத்துறை என்பதால். ஆகையால் இக்குறைப்பாடுகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு அதிநவீன சிகிச்சை முறைகளும் காணப்படுகிறது. ஆனால், இது குறித்து அறியாத அதிகமான ஆண்கள் தமக்கு குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் எவ்வாறான சிகிச்சைகளை பெற்று எவ்வகையான மருந்துகளை எடுக்கலாம் என அறியாதிருப்பதால் நாட்கள் செல்ல செல்ல அவர்களது குறைகளும் அதிகரித்துக்கொண்டு செல்லுமே தவிர குறைந்ததாக தெரியாது. குழந்தையின்மை பிரச்சினை என்பது பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவானதொரு விடயம். திருமணம் முடித்து ஒரு வருடத்திற்குள் பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்கான நிலைமை இல்லாத பட்சத்தில் வைத்தியர் ஆலோசனை அவசியம் என்பதை இருபாலரும் அறிந்திருப்பது அவசியம்.

காலம் கடந்து சில நடவடிக்கைகளை செய்வதற்கு முன்பு நிலைமையை கண்டறிந்தவுடன் ஆண்கருத்தரிப்பு நிபுணரை அணுகும் போது அவர்களுக்கு உரிய பலனை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். தாமதமானால் தான் தந்தையாவதில் பிரச்சினை ஏற்பட்டு விடுகின்றது. ஆகையால் இப்பிரச்சினை இருப்பவர்கள் ஆரம்பத்திலே ஒரு ஆண் கருத்தரிப்பு நிபுணரை அணுகி அவர்களின் அறிவுரையை கேட்டு முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்களேயானால் அவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.

சில நேரங்களில் ஆண்களின் விதை பகுதியில் சுருள் சிரை (varicose) ஏற்படுகின்றது. அதாவது, ஆண்களின் விதையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நேரம் இரத்தம் தேங்கியிருக்கும் போது அந்த இரத்தத்தால் ஏற்படும் அதிகமான வெப்பநிலையினால் விதைசெயல்படும் தன்மை குறைகிறது. இப்பிரச்சினையுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதன் துடிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் கருத்தரிப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. குழந்தையின்மை பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால், சில ஆண்களுக்கு வெரிகோஸிலின் பிரச்சினை இருந்தும் கூட ஆரோக்கியமான உயிரணுக்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

வெரிகோஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியுமா?

வெரிகோஸ் பிரச்சினை இருந்து உயிரணுக்கள் குறைபாடுகள் இல்லாதிருந்தால் அறுவை சிகிச்சை அவசியமில்லை. வெரிகோஸ் பிரச்சினை உள்ளவர்கள் குழந்தைகளை தக்க வைக்கும் சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் போதும் மூன்று மாதம் வரை பொறுத்திருந்து சாத்தியப்படுகிறதா எனப்பார்க்க வேண்டும்.

அந்த மூன்று மாத காலப்பகுதியில் நாம் அவர்களுக்கு உரிய மருந்துவகைகளை கொடுத்து உயிரணுக்களை அதிகரிக்கச் செய்வோம். வெரிகோஸ் இருப்பவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை அவசியப்படாது. இதன் போது சரியானவர்களை தேர்ந்தெடுத்து சிகிச்சையை முறையாக செய்யும் போது குறைந்தது 80% வெற்றியடைய வாய்ப்பாயிருக்கிறது. அறுவை சிகிச்சையின் பின்னர் மூன்று மாதம் வரை பொறுத்திருந்து முன்னேற்றங்கள் தென்படுகிறதா? எனப்பார்க்க வேண்டும். இந்த மூன்று 3 மாத காலப்பகுதியில் மருந்துகளை அதிகமாகக் கொடுத்து உயிரணுக்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

உயிரணுக்கள் மூன்று விதமான துடிப்புக்களை கொண்டது. அதாவது ஒன்று அசைந்து செல்ல கூடிய துடிப்புகள். இன்னொன்று துடிப்பிருக்கும் ஆனால், அசையாத துடிப்பாக இருக்கும். மூன்றாவது அதனுடைய தரம். எப்படி ஒரு மனிதனுக்கு சீரான ஒரு இதயத்துடிப்பு இருக்கிறதில்லையோ சீராக இரத்தக்கொதிப்பு இருப்பதில்லையோ சீரான ஒரு சக்கரை அளவு இருப்பதில்லையோ அது போல் உயிரணுக்களிலும் மாறுபாடு நொடிக்கு நொடி நாளுக்கு நாள் வேறுபடும். ஆகையால் ஒரு முறை ஒரு ஆணை பரிசோதித்து அவருக்கு குறைபாடு இருக்கிறது எனக்கூறக்கூடாது. சில சமயங்களில் உடல் ஆரோக்கியம் குறையும் பட்சத்திலும் உயிரணுக்களில் பிரச்சினை ஏற்படும். ஆகையால் பரிசோதனைகளின் பின் தான் ஒருவருக்கு குறைபாடு இருக்கிறது என்பதை நாம் ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்பதை பலர் அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான இலவச வைத்திய ஆலோசனையை பெற விரும்புபவர்கள் மார்ச் மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் மருத்துவ கண்காட்சியில் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை டாக்டர் சரவணன் லக் ஷ்மணனிடம் பெற்றுக்கொள்ள முடியும்.