ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் விடுத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே காரணம் ஐக்கிய தேசிய கட்சி காரணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெளிவான தூரநோக்கோ அல்லது அரசியல் கொள்கையோ இல்லாமல் செயற்படுகின்றது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தில் ஊழல் கொலைகள் போன்றவற்றில் ஈடுபட்ட நிலையில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஏற்படுத்திக்கொண்டுள்ள இரகசிய உடன்பாடே கட்சியின் இன்றைய நிலைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேற விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் சமீப காலங்களில் செயற்பட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.