நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்­தாரா ஆகி­யோரின் திரு­மணப் புகைப்­ப­டங்கள் சென்­னை­ மு­ழு­வதும் காதலர் தினத்­தன்று ஒட்­டப்­பட்­டி­ருந்­தமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிம்­பு-­–ந­யன்­தாரா காதல் முறி­வுக்கு பின்னர் எந்த திரைப்­ப­டங்­க­ளிலும் இரு­வரும் இணைந்து நடிக்­க­வில்லை. தற்­போது ‘இது நம்ம ஆளு’ திரைப்­ப­டத்தில் இணைந்து நடித்­துள்­ளனர்.

இத்­தி­ரைப்­ப­டத்தில் இவர்கள் இரு­வ­ருக்கும் திரு­மணம் நடப்­ப­து­போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை வெளிப்படுத்தம் வகையில் ஏற்­க­னவே இது

போன்ற சில புகைப்­ப­டங்கள் வெளி­யாகி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின.

இந்­நி­லையில், காதலர் தின­மான நேற்­று­முன்­தினம் ‘இது நம்ம ஆளு’ படக்­கு­ழு­வினர் இத்­தி­ரைப்­ப­டத்தின் புதிய சுவ­ரொட்டி ஒன்றை வெளி­யிட்­டுள்­ளனர். அதில், சிம்­புவும் நயன்­தா­ராவும் கழுத்தில் மாலை­யுடன் திரு­மண வர­வேற்பில் நிற்­பது போன்ற புகைப்­ப­டத்தை அச்­சிட்­டுள்­ளனர்.

இதனையடுத்து இப் புகைப்­பட சுவ­ரொட்­டிகள் சென்னை நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

காதலர் தினத்தில் சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் நிஜத்தில் திருமணம் நடை பெற்றுவிட்டது. இதனை கொண்டாடும் விதமாகவே இவ் சுவரொட்டிகள் ஒட்டப்

பட்டுள்ளதாக கதை பரவியது இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.