மக்களே அவதானம் : உறு­தி­களை மாற்­றி­ய­மைத்து 4 கோடி ரூபா மோசடி

Published By: Robert

10 Apr, 2018 | 08:58 AM
image

காணியின் உரி­மை­யா­ள­ருக்கு தெரி­யா­ம­லேயே, அக்­கா­ணியை பிறி­தொ­ரு­வ­ருக்கு காணி பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் உள்ள  உறு­தியின் தக­வல்­களை மாற்றி, போலி­யாக  செய்­யப்­பட்ட உறு­தி­யொன்­றினை தயார் செய்து விற்­பனை செய்யும் கும்பல்  ஒன்­றினை பேலி­ய­கொட விஷேட குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். 

பேலி­ய­கொடை மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இந்த மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், கிடைக்கப் பெற்ற 11 முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய 4 கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான மோசடி இடம்­பெற்­றுள்­ளமை கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், மேலும் 300 இற்கும் அதி­க­மான போலி, உண்மை உறு­திகள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் இம்­மோ­ச­டியால் பாதிக்­கப்­பட்ட பலர்  இன்னும் உள்­ள­தாக நம்­பு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

பேலி­ய­கொடை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்தில் இது தொடர்பில்  நேற்று மாலை விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினை நடாத்­திய அவர் இதனை தெரி­வித்தார். 

பத்­தி­ரிகை விளம்­ப­ரங்­களைப் பார்த்து, விற்­ப­னைக்கு உள்ள காணி­களை தேர்ந்­தெ­டுக்கும் சந்­தேக நபர், பின்னர் காணி பதி­வாளர் அலு­வ­ல­கத்­துக்கு சென்று குரித்த காணியின் உண்மை உறு­தியைப் பரீட்­சித்து அந்த உண்மை உறு­தியில் சூட்­சு­ம­மாக மாற்­றங்­களைச் செய்­வ­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி போலி உறு­தியைத் தயா­ரித்து, தரகர் ஊடாக குறித்த காணியை விற்­பனை செய்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

 கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந் நட­வ­டிக்கை இடம்­பெற்­றுள்­ள­தாக கூறும் பொலிஸார்,  பேலி­ய­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய, மேல் மாகா­ணத்தின் வடக்கு பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் அத்­தி­யட்சர்  உபாலி ஜய­சிங்க அகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பேலி­ய­கொட விஷேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர்  எஸ்.எஹ்,ஏ,ஆர். சமிந்த தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லெயே சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சந்­தேக நபரின் மினு­வாங்­கொடை இல்­லத்தின் பின்னால் நிலத்­துக்கு கீழ் சூட்­சு­ம­காக கொங்றீட் , தக­டுகள் இட்டு மறைக்­கப்­பட்­டி­ருந்த கிடங்­குக்­குளு்  இருந்து போலி, உண்மை காணி உறு­திகள், மோச­டிக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு அடை­யாள அட்­டைகள், வங்கி காசோ­லைகள் உள்­ளிட்­ட­வற்றை மீட்­ட­தா­கவும் போலி உறு­தி­களை தயா­ரிக்க பயன்­ப­டுத்­திய பயன்­ப­டுத்­திய கணி­னிகள்,  காணி விற்­ப­னைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 28 தொலை­பே­சிகள் மற்றும் சிம் அட்­டை­க­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­ய­தாக பொலிஸ் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

 பேலி­ய­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற பல முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள்  விஷேட குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன்­போது இந்த மோச­டி­களின் பிர­தான சந்­தேக நப­ரான 42 வய­தான, ராகம - பட்­டு­வத்­தயைச் சேர்ந்த மினு­வாங்­கொ­டையில் தற் சமயம் வசித்து வந்த முத்து தந்­திரி  பெஸ்­டி­யன்கே லசித் ப்ரயன் நிஷாந்த பெர்­ணான்டோ என்­ப­வரை நாம் கைது செய்தோம். இந் நபரால்  மோச­டிக்கு உள்­ளான எவ­ரேனும் இருப்பின் அது தொடர்பில்  பேலி­ய­கொட விஷேட குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு அறி­விக்­கலாம்.

 இந்த மோச­டி­களை  சந்­தேக நபர் பின்­வ­ரு­மாறு சூட்­சு­ம­மாக முன்­னெ­டுத்­துள்ளார். முதலில், இந்த சந்­தேக நபர் பத்­தி­ரி­கையில் வரும் விளம்­ப­ரங்­களில் காணி விற்­பனை தொடர்­பி­லான விளம்­ப­ரங்­களை தேர்ந்­தெ­டுத்­துள்ளார். அவ்­வி­ளம்­ப­ரத்தில் உள்ள  தக­வல்­களைப் பெற்று அவ்­வி­டத்­துக்கு சென்று  குறிப்­பிட்ட காணி­யையும் பரீட்­சிக்கும் சந்­தேக நபர், அது எவ­ரேனும் குடி­யி­ருக்கும் இடமா அல்­லது கேட்­பா­ரற்று கிடக்கும் காணியா என்­பதை தீர்­மா­னித்த பின்­ன­ரேயே  தனது நட­வ­டிக்­கை­க­ளுக்குள் இறங்­கி­யுள்ளார்.

 பின்னர் அவர் அந்த காணிக்­கு­ரிய  பதி­வினை தேடி குறிப்­பிட்ட காணிப் பதி­வாளர் அலு­வ­ல­கத்­துக்கு சென்று காணி உறு­தி­யையும்  பரீட்­சித்­துள்ளார்.  இவ்­வாறு பரீட்­சிக்கும் போது அவர் சூட்­சு­ம­மாக சில மாற்­றங்­களை அந்த காணி உறு­தி­களில் செய்­துள்ளார்.  அதா­வது உதா­ர­ண­மாக  காணி உறு­தியில் உரி­மை­யாளர் பெயர் பிர­சன்ன என்று இருந்தால் அதனை பிர­சங்க என்றும்  உறுதி இலக்கம் 157 என்று இருந்தால் அதனை 457 எனவும் மாற்றி அதன் பிர­தி­யொன்­றி­னையும் அவர் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

 பின்னர் காணி உறுதி மற்றும் ஆவ­ணங்­களில் உள்ள தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்­துக்கு அமைய அந்த வயதை ஒத்த ஒரு­வரை சந்­தேக நபர் தனது திட்­டத்­துக்­காக கண்­டு­பி­டித்து பயன்­ப­டுத்­தி­யுள்ளார். அவ்­வாறு கண்­டு­பி­டிக்­கப்ப்ட்ட நபரின் புகைப்­ப­டத்தை எடுத்து அதற்கு போலி­யான  தேசிய அடை­யாள அட்டை ஒன்­றினை முதலில் சந்­தேக நபர் தயார்ச் செய்­துள்ளார்.  அவ்­வாறு தயார்ச் செய்யும் போது பெயர் காணி உறு­தியில் மாற்­றப்­பட்ட பெய­ருக்கே தயார் செய்­யப்­பட்­டுள்­ளது. பின்னர்  அந்த போலி அடை­யாள அட்­டைக்கு ஏற்றால் போல் போலி­யான காணி உறு­தியும் தயார்ச் செய்­யப்­பட்டு அவ்­வு­று­திக்கு அமை­யவே, தரகர் ஒருவர் ஊடாக காணி­யா­னது விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளன. 

 இந் நிலையில் காணியை விற்கும் போது, காணியின் உரி­மை­யா­ள­ராக போலி அடை­யாள அட்­டையில் உள்ள நபர் முன்­னி­றுத்­தப்­படும் நிலையில் போலி உறு­தியின் பிரதி ஒன்று, காணி கொள்­வ­னவு செய்யும் நப­ருக்கும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த உறு­தியை அவர் காணி பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் பரீட்­சிக்கும் போது ஏற்­க­னவே அங்கு பெயர் மற்றும் இலக்கம் ஆகி­யன மாற்­றப்ப்ட்­டுள்ள நிலையில்; அத­னுடன் இணங்கிப் போவதால் அங்கு வைத்து இந்த மோச­டியை கண்­டு­பி­டிப்­பது சாத்­தி­ய­மில்­லாமல் போகின்­றது.

காணியை விற்­பனைச் செய்த பின்னர் குறித்த சந்­தேக நபர் தனது தொலை­பேசி இலக்­கத்­தையும் தொலை­பே­சி­யையும் மாற்றும் நிலையில், காணியை கொள்­வ­னவு செய்தோர் காணியில் ஏதேனும் நிர்­மா­ணிக்க முற்படும் வேளையில் உண்மை உரிமையாளர்களுடன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்கின்றனர். 

இவ்வாறே மிக சூட்சுமமாக ஒவ்வொரு மோசடியும் இடம்பெற்றுள்ளன. இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபரையும், கானிகளின் உரிமையாளர்களாக  போலி அடையாள அட்டைகளுடன் சொந்தம் கொண்டாடிய 5பேரையும் நாம் கைது செய்துள்ளோம். இந்த மோசடிகளுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி கைது வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளோம். நாட்டின் எப்பகுதியிலேனும் இவ்வாரு யாரேனும் ஏமாற்றப்ப்ட்டிருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறியத்தாருங்கள். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16