நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு தொலைத் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காணாமல் போயிரிந்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாயமாகியிருந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்த  ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 இளைஞகள் என தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்கள் நேற்று காலை 11 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை இலக்கமான 119 என்ற எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.