சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் புதுவருடத்தின் பின்னர் அமுலுக்கு வரும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

33 வீதி ஒழுங்கு விதிமீறல்கள் தொடர்பான அபராதம் சீர்த்திருத்தப்பட்டு புதிய அபராத விபரம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதற்கமைய அவற்றுள் 2 ஒழுங்கு விதி மீறல்களுக்கு முன்பு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 6,000 மற்றும் 3,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த முச்சக்கர வண்டிகளுக்காக கட்டாய மீட்டர் கருவி பொருத்தல் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.