கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர்.
இன்று காலை 6 மணியளவில் பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர் சபையின் முதலாவது கூட்டத்திற்குச் சென்றனர்.
தங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 11 உறுப்பினர்களில் பலா் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அத்தோடு அனைவரும் போராட்டக் காலங்களில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் என்ற வகையிலும் நாங்கள் மாவீரர்களின் தியாகத்தை மதித்து எங்களின் மக்களுக்கான பணியை முன்னெடுக்கவுள்ளோம் என 2 மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான தயாபரன் சர்மிளா(நளினி) தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM