பிறக்கும் விளம்பி வருடம் உங்களுக்கு எப்படி.?

Published By: Robert

08 Apr, 2018 | 02:27 PM
image

விளம்பி வருடம் சித்­திரை மாதம் 01 ஆம் நாள் அதா­வது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை வாக்­கியப் பஞ்­சாங்­கப்­படி  காலை 07.00 மணிக்கு பிறக்­கின்­றது. 

விளம்பி என்­பதை தமிழில் பிர­கா­ச­மான, ரம்­ய­மான வருடம் என கொள்­ளலாம். 

இது இந்­துக்­களின் 60 வருட சுற்று வட்­டத்தில் 32 ஆவது வரு­ட­மாகும். முத­னா­ளி­ரவு அதா­வது 13  ஆம்  திகதி வெள்­ளிக்­கி­ழமை பின் இரவு 03. 00 மணி­முதல் சனிக்­கி­ழமை முற்­பகல் 11. 00 மணி­வரை விஷு புண்­ணிய கால­மாகும். 

இப்­புண்­ணிய காலத்தில்  வைக­றையில் துயி­லெ­ழுந்து மனத்­தூய்­மை­யுடன் இஷ்ட தெய்­வங்­களை, குல தெய்­வங்­களை மன­தார பிரார்த்­தனை செய்து கண்­ணாடி, தீபம், நிறை­குடம், தன் வலக்கை, திரு­மறைப் புத்­தகம், வெற்­றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்­குமம், சந்­தனம் முத­லான மங்­களப் பொருட்­களை தரி­சனம் செய்து, நித்­திய கர்­மா­னுஷ்­டா­னங்­களை முடித்து, மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்­றை­யி­லையும் காலில் ஆலி­லையும் வைத்து ஸ்நானம் செய்து, சிகப்பு நிற பட்­டா­டை­யா­யினும் அல்­லது சிகப்பு, கறுப்பு கரை­ய­மைந்த புதிய பட்­டா­டை­யா­யினும் அணிந்து, விநா­யகர் மற்றும் குல­தெய்வ வழி­பாடு, சூரிய நமஸ்­காரம் செய்து, குரு, பெற்றோர் முத­லிய பெரி­யோரை வணங்கி, அவர்­களின் ஆசி பெற்று, உற்றார், உற­வினர், நண்­பர்­க­ளுடன் அள­வ­ளாவி, அரு­சுவை உண­வுடன் வேப்­பம்பூ, நெல்­லிக்­கனி போசனம் செய்து, புது­வ­ரு­டத்தில் தாங்கள் ஆற்­றக்­கூ­டிய, தாங்கள் செய்­யக்­கூ­டிய குடும்ப, சமய, சமூகப் பணி­களை மனதில் திட்­ட­மிட்டு, உறுதிப் பூண்டு மங்­க­ள­க­ர­மாக வாழ்­வோ­மாக. 

விளம்பி புது­வ­ருட கைவிஷேடம் வழங்கும் நேரங்கள் 

14 ஆம் திகதி சனி பகல் 12 மணி 15 நிமிடம் முதல் 02.10 தொடக்கம் மாலை 6 மணி 21 நிமிடம் முதல் 8 மணி 13 நிமிடம் வரை 16 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பகல் 12 மணி 30 நிமிடம் முதல் 02 மணி 02 நிமிடம் வரை­யாகும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஜாதக ரீதி­யாக, நட்­சத்­திர ரீதி­யாக மற்றும் நவக்­கி­ரக கோள் சஞ்­சா­ரங்­களின் அடிப்­ப­டையில் ஏற்­ப­டக்­ கூ­டிய பலன்­களே நமக்கு விதிக்­கப்­பட்ட விதி­யா­வ­தோடு பூர்­வ­ஜென்ம பாவ புண்­ணிய வினைப்­ப­ய­னா­கவும் அமை­கி­றது. எனினும் இவற்றை மாற்­றக் ­கூ­டிய வல்­லமை இறை வழி­பாட்டுக்கும் நமது முயற்­சிக்கும் உண்டு. வாழ்வில் நாம் இறை­வ­ழி­பாட்­டுடன் தாய், தந்தை, பெரியோர், குரு ஆசி­யுடன் உண்­மை­யாக, நேர்­மை­யாக மதப்­பற்­றுடன் ஒழுக்­க­மாக வாழ்­வோ­மே­யாயின் எந்த நாளும், எந்த வரு­டமும், நமக்கு சாத­க­மாக அமையும் என்­பதில் ஐய­மில்லை. 

இவ்­வி­ளம்பி வருடம் தமி­ழுக்கு புரட்­டாதி மாதம், ஆங்­கில திக­திப்­படி 2018 ஒக்­டோபர் 4 ஆம் திகதி விடி­யற்­காலை குரு பகவான் துலா ராசி­யி­லி­ருந்து விருச்­சிக ரா­சிக்கு பெயர்ச்­சி­ய­டை­கிறார். பின் 2019 மார்ச் 13 ஆம் திகதி தனுசு ரா­சிக்கு பெயர்ச்­சி­யாகி வரு­டாந்தம் வரை தனுசு ராசி­யிலே நிற்­கிறார். 

2017 டிசம்பர் மாதம் சனி­மாற்றம் நடை­பெற்­றது. இவ்­வ­ருடம் சனீஸ்­வர பகவான் தனுசு ரா­சி­யி­லேயே நிற்­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

04.10.2018 வியா­ழக்­கி­ழமை இரவு 9.42க்கு துலாம் – விருச்­சிகம் பெயர்ச்சி. பின் 13.03.2019 புதன்­கி­ழமை விருச்­சிகம் – தனுசு.

பூசம், மகம், பூரம், உத்­தரம் 1, அனுசம், பூரட்­டாதி 4, உத்­தி­ரட்­டாதி, ரேவதி.

இவற்றில் பிறந்தோர் தவ­றாது மருத்­து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து தம்மால் இயன்­ற ­தான தரு­மங்­களை செய்து சங்­கி­ரம தோஷ நிவர்த்தி அடை­யலாம்.

27.07.2018 வெள்ளி பூரண சந்­திர கிர­கணம் – 11.54 பி.ப – 28.07.2018 சனிக்­கி­ழமை 03.49 காலை. இவ்­வி­ளம்பி வருடம் வைகாசி மாதம் இரண்டு அமா­வாசை வரு­வதால் சுப­கா­ரி­யங்கள் செய்­வதைத் தவிர்ப்­பது உத்­த­ம­மாகும். 

(அச்­சு­வினி, பரணி, கார்த்­திகை 01 ஆம் பாதம்)                 

புத்­தாண்டின் ஆரம்பம் முதலே மனதில் நிம்­ம­தியும், உற்­சா­கமும், எதிர்­காலம் தொடர்­பான நம்­பிக்­கையும் உண்­டாகும். இவ்­வ­ரு­டத்தின் முதல் ஆறு மாதங்கள் அதிக நன்­மை­யா­கவும் மீதி ஆறு மாதங்கள் மத்­தி­ம­மா­கவும் அமை­யப்­போ­கி­றது. 

குடும்­பத்தில் உற­வுகள் மேம்­படும். கருத்து வேறு­பா­டுகள் நீங்கும். உற­வுகள் மேம்­பட சில விட­யங்­களில் நீங்­களும் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­ப­டு­வது நல்­லது. தொழில், வியா­பார, உத்­தி­யோக ரீதி­யாக பாதிப்­பில்லை. எனினும் குறு­கிய கால புதிய முத­லீ­டு­களே உத்­தமம். ஒக்­டோபர் 04 இல் நடை­பெறும் குரு­மாற்றம் உங்­க­ளுக்கு அட்­ட­மத்து வியா­ழ­னாக வரு­வதால் அதன் பின் புதிய முத­லீ­டு­களை தவிர்த்து செயற்­ப­டு­வ­துடன் பண விட­யங்­களில் பொறுப்பு நிற்­பதை தவிர்க்­கவும். 

பெண்கள் யாரின் மன­தையும் வீணாக நோகச் செய்­யாது பேசு­வது நல்­லது. மாண­வர்­க­ளுக்கு வருட முற்­ப­கு­தியில் கல்­வியில் கவ­லை­யீனம் வருட பிற்­ப­கு­தியில் பாதிப்பைத் தரலாம். பண கொடுக்கல், வாங்­கல்­களை உட­னுக்­குடன் தீர்ப்­பது நன்மை. சுப­கா­ரி­யங்கள் மற்றும் திரு­மண பலன்­களை எதிர்­பார்த்­தி­ருப்போர் வருட ஆரம்­பத்­தி­லேயே அதற்­கான கடும் முயற்சி செய்தால் நற்­பலன் உண்டு. வய­தானோர் தேக ஆரோக்­கி­யத்தில் அதிக கவனம் செலுத்­து­வ­தோடு தொடர்ந்து மருந்து, மாத்­தி­ரை­களை விடாது பாவிப்­பது நன்­மை­யாகும். ஒக்­டோபர் 04 ஆம் திக­திக்குப் பின் குரு தட்­ஷ­ணா­மூர்த்­திக்கு வியா­ழக்­கி­ழ­மை­களில் தொடர்ந்து கடலை மாலை சாத்தி, மஞ்சள் பூவால் அர்ச்­சனை செய்து, நெய் தீப­மேற்றி, வழி­பட பாதிப்­புக்கள் குறையும்.

 மாவிட்­ட­புரம் கந்­த­சாமி முரு­கப்­பெ­ருமான் வழி­பாடு உத்­தமம் மேஷ ரா­சி­யு­டைய அச்­சு­வினி, பரணி, கார்த்­திகை 1 ஆம் பாதம் கொண்ட உங்­க­ளுக்கு பொதுப் பலன்­படி 100 க்கு 65வீதம் உத்­த­ம­மாகும். 

(கார்த்­திகை 2, 3, 4 ஆம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1, 2) 

தொடரும் அட்­ட­மத்துச் சனியும் 06 ஆம் இட வியா­ழனும் உங்­களை படா­த­பாடு படுத்­து­வது வருட நடுப்­ப­குதி வரையே தொடரும். அது­வரை எதிலும் அவ­ச­ரப்­ப­டாமல் சற்று பொறு­மை­யுடன் சிந்­தித்து நிதா­ன­மாக செயற்­ப­டவும். பொரு­ளா­தார, தொழில், பண பிரச்­சி­னை­களை, வீட்டில் வீண்­கோ­ப­மாக காட்­டாமல் பொறு­மை­யுடன் உற­வு­களை அனு­ச­ரித்து செல்­லவும். பதவி உயர்வு, தொழில் மேன்­மை­யினை எதிர்­பார்ப்போர் வருட பிற்­ப­கு­தியில் அதற்­கான முயற்சி சாத­க­மாகும். புதிய பண முத­லீ­டு­களை தவிர்ப்­ப­துடன், பண விட­யங்­களில் பொறுப்பு நிற்­பதை தவிர்க்­கவும்.

பெண்கள் குடும்ப செல­வீ­னங்­களை திட்­ட­மிட்டு கட்­டுப்­ப­டுத்தி செயற்­பட வேண்டும். பேச்சில் யார் மன­தையும் புண்­ப­டுத்­தாது பேசு­வது பிரச்­சி­னை­களை குறைக்கும். மாண­வர்கள் கல்வி தவிர்ந்த ஏனைய விட­யங்­களில் கவனம் செலுத்­து­வதைக் கட்­டா­ய­மாக தவிர்க்­கவும். 

அட்­ட­மத்து சனி தொடர்­வதால் சனிக்­கி­ழ­மை­களில் சனீஸ்­வர பக­வா­னுக்கு எள் எண்ணெய் தீப­மேற்றி தொடர்ந்து வழி­பட்டு வர பாதிப்­புக்கள் குறை­வ­டையும். 

வாகனம் வைத்­தி­ருப்­போ­ருக்கு அதன் பரா­ம­ரிப்பு செல­வுகள் அதி­க­ரிக்கும். வீண், பிர­யாண பய­ணங்கள் ஏற்­படும். சுப­கா­ரிய, திரு­மண பலன்­களை எதிர்­பார்த்­தி­ருப்­போ­ருக்கு அக்­டோபர் 04 இன் பின் வாய்ப்­புக்கள் உண்டு. 

திருக்­கே­தீஸ்­வரப் பெருமான் வழி­பாடு மற்றும் தரி­சனம் உத்­தமம்

இடப இரா­சி­யி­னை­யு­டைய கார்த்­திகை 2, 3, 4 ஆம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1, 2 ஆம் பாதம் கொண்ட உங்­க­ளுக்கு 100 க்கு 45 வீதமே நன்­மை­யாகும். 

(மிரு­க­சீ­ரிடம் 3, 4ஆம் பாதம், திரு­வா­திரை, புனர்­பூசம் 01, 02, 03ஆம் பாதங்கள்)

வருட ஆரம்பம் முதலே குரு பகவான் திரி­கோண ஸ்தான­மான 05 ஆம் வீட்­டிலும் சனி பகவான் 07 ஆம் வீட்­டிலும் உள்ளார். இவை நற்­ப­லன்­க­ளையே கொடுக்கும். தொழில், வியா­பார, உத்­தி­யோ­கத்தில் முன்­னேற்றம் உண்­டாகும். எதையும் திட்­ட­மிட்டு, சிந்­தித்து செயற்­ப­டுத்­து­வதால் பிரச்­சி­னைகள் குறையும். பண விட­யங்கள் சாத­க­மாகும். எதிர்­பார்த்­தி­ருந்த வங்­கிக்­கடன் சரி வரும். புதிய முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் உரு­வாகும். எதிலும் மனக்­கு­ழப்­ப­மின்றி உறு­தி­யான முடி­வு­களை எடுப்­ப­துவே சாத­க­மாகும். 

சிறு தொழில் முயற்­சிகள் பெண்­க­ளுக்கு சாத­மாகும். ஆடைகள், தைத்த ஆடைகள், ஆப­ர­ணங்கள் வாங்கி விற்போர் பய­ன­டைவர். மாண­வர்கள் கணிதம், விஞ்­ஞானம் போன்ற துறை­களில் கூடுதல் கவனம் செலுத்­து­வது நல்­லது. 

புதிய வாகனம் வாங்க முயற்சி செய்து வருவோர் கனவு சாத­க­மாகும். 

சுப­கா­ரிய, திரு­மண தடை தாம­தங்கள் நிவர்த்­தி­யாகி மணம் போல் நல்­வாழ்வு அமையும். வாய்ப்பு ஏற்­படும். வய­தா­னோ­ருக்கு தேக ஆரோக்­கியம் பாதிப்­பில்லை. வைத்­திய செல­வுகள் குறை­வ­டையும்.

வியா­ழக்­கி­ழ­மை­களில் நல்லூர் முரு­கப்­பெ­ரு­மானை தரி­சனம் செய்­வது மன­தார பிரார்த்­திப்­பது என்­பன மேலும் நற்­ப­லன்­களைத் தரும். 

மிதுன ரா­சி­யி­னை­யு­டைய மிரு­க­சீ­ரிடம் 3, 4 ஆம் பாதம், திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2, 3 ஆம் பாதத்­தி­னை­ கொண்டவர்களுக்கு 100 க்கு 65வீதம் உத்­த­ம­மாகும். 

(புனர்­பூசம் 04 ஆம் பாதம், பூசம், ஆயி­லியம்) 

தன்­னம்­பிக்­கையும் உழைப்பில் அதிக ஈடு­பாடும் கொண்ட கடக ரா­சி­யு­டைய நீங்கள், பொரு­ளா­தார ரீதி­யான கடும் பாதிப்பு இல்­லா­விட்­டாலும் வர­வுக்கு அதி­க­மான செலவை கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மலும் தொடர்ந்தும் இவ்­வ­ருட நடுப்­ப­கு­தி­வரை வரவை மீறிய செல­வாலும் அவ்­வப்­போது ஏற்­படும் உடல் உபா­தை­க­ளாலும் சோர்­வ­டைந்­தி­ருந்த காலம் முடிந்து ஒக்­டோபர் 04 இல் நடை­பெறும் குரு மாற்­றத்தால் குரு­ப­கவான் 5 ஆம் வீட்­டுக்கு பெயர்ச்­சி­ய­டை­வது பாரிய அளவில் முன்­னேற்­ற­மான பலன்­களைத் தரும். 

அது­வரை ஒரே சீரா­கவே தொழில், வியா­பார உத்­தி­யோக முன்­னேற்றம் காணப்­படும். வைத்­திய செல­வு­க­ளுக்கும் குறை­வி­ருக்­காது. எனினும் பெரிய வருத்தம், வியாதி என்று ஏதும் ஏற்­ப­டாது. எந்த விட­யத்­திலும் கூடுதல் அக்­கறை, கவனம் தேவை. பெண்கள் வீட்டு, குடும்ப செல­வு­களை திட்­ட­மிட்டு செய்­வது நல்­லது. சேமிப்­புக்­கான வழியை தேட வேண்­டிய காலம். வீண் வார்த்­தை­களை விடாது பொறு­மை­யுடன் செயற்­ப­டு­வது உத்­தமம். 

மாண­வர்­களின் கல்வி நிலை ஒரே சீரா­கவே இருக்கும். எனினும் ஒக்­டோபர் 4 இன் பின் உங்­களின் கடின உழைப்பு நல்ல பெறு­பே­று­களைத் தரும். 

வய­தா­ன­வர்கள் இறை­வ­ழி­பாடு மன அமைதி தரும். உண­வுக்­கட்­டுப்­பாடு, நடைப்­ப­யிற்சி, யோகா என்­பன உடல், மன ஆரோக்­கி­யத்­திற்கு சாத­க­மாகும். 

நயினை நாகபூசணி அம்­பாளை வழி­ப­டு­வ­துடன் மன­தார பிரார்த்­தனை செய்­வது பாதிப்­புக்­களை குறைக்கும். 

கடக ரா­சி­யி­னை­யு­டைய புனர்­பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயி­லியம் நட்­சத்­தி­ரங்­க­ளை­யு­டைய நேயர்­களே இவ்­வி­ளம்பி வருட பொதுப் பலனின் படி உங்­க­ளுக்கு 100 க்கு 75வீதம் உத்­த­ம­மாகும். 

(மகம், பூரம், உத்­தரம் 01 ஆம் பாதம்) 

வருட ஆரம்­பத்­தி­லி­ருந்தே குரு 03 ஆம் வீட்­டிலும் சனி 5 ஆம் வீட்­டிலும் உள்­ளது. வருட நடுப்­ப­குதி வரை சற்று பாதிப்­புக்­க­ளையும் பின் மத்­தி­ம­மான பலன்­க­ளையுமே காட்டும். 

தேக ஆரோக்­கி­யத்தில் அதிக கவனம் தேவை. உஷ்ண மற்றும் கண் நோய் பாதிப்­புக்கள் ஏற்­ப­டலாம். மருந்து மாத்­தி­ரை­க­ளையும் தெரிவு செய்து பாவிக்­கவும். பண கொடுக்கல், வாங்கல், பொறுப்பு நிற்­பது என்­ப­வற்றில் அதிக கவனம் தேவை. தொழில், வியா­பார உத்­தி­யோ­கத்­தர்கள் அதிக கவ­னத்­துடன் பொறுப்­பு­ணர்ந்து செயற்­பட வேண்டும். எதிலும் எச்­ச­ரிக்­கை­யுடன் செயற்­பட்டு உங்­களை காத்­துக்­கொள்ள வேண்­டிய காலம். 

புதிய முத­லீ­டுகள், காணி, வீடு, நிலம், வாகனம் இவற்றை வாங்­கு­வது விற்­பதில் பாதிப்­புக்கள் ஏற்­ப­டலாம். 

மாண­வர்கள் கல்வி விட­யங்­களில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டால் மாத்­தி­ரமே சுமா­ரான பெறு­பேற்றைக் கூட எதிர்­பார்க்­கலாம். வீண் பொழுது­போக்கில் கவனம் செலுத்­து­வதை தவிர்த்து கல்­வியில் ஊக்கம் தேவை. 

சுப­கா­ரிய, திரு­மண பலன்கள் சற்று தடை, தாம­தங்­க­ளையே காட்டும். ஒக்­டோபர்  04 இன் பின் முயற்­சிகள் சாத­க­மாக வாய்ப்புண்டு. 

கீரி­மலை நகு­லேஸ்­வரம் பதி நகு­லாம்­பிகை சமேத நகு­லேஸ்­வரப் பெரு­மானை தரி­சனம் செய்­வ­தோடு மன­தார பிரார்த்­தனை செய்ய நற்­பலன் உண்­டாகும். 

சிம்ம ரா­சி­யு­டைய மகம், பூரம், உத்­தரம் 01 ஆம் பாதத்­தி­னை­ கொண்ட உங்­க­ளுக்கு 100 க்கு 40 வீதம் உத்­த­ம­மாகும். முயற்­சியும் இறை­வ­ழி­பாடும் நன்மை தரும். 

(உத்­தரம் 2, 3, 4 ஆம் பாதம், அத்தம், சித்­திரை 01 ஆம், 02 ஆம் பாதம்) 

கடந்த ஆறு­மா­த­மாக நடை­பெற்று வரும் ஒக்­டோபர் 04 ஆம் திகதி வரை குரு 02 ஆம் வீட்­டி­லேயே இருக்­கிறார். எனவே வீடு, குடும்பம் என உங்­களின் முயற்­சிகள் சாத­க­மாகும். எண்­ணங்கள், திட்­டங்கள் செயல் வடிவம் பெறும். தேக ஆரோக்­கியம் பாதிப்­பில்லை. குடும்­பத்தில், வீட்டில் சுப­கா­ரிய நற்­ப­லன்கள் நிறை­வேறும். வர­வேண்­டிய கடன் பணம் வந்து சேரும். முத­லீ­டுகள், தொழில், வியா­பா­ரங்கள் இலாபம் தரும். உத்­தி­யோ­கத்தில் மேல­தி­கா­ரி­களின் பாராட்டும், சிபா­ரிசும் பதவி உயர்­வான நிலை­யினைத் தரும். புதிய தொழில் முயற்­சிகள் நன்­மை­யாகும். குடும்­பத்தில் நீடித்­து­வந்த கருத்து வேறு­பா­டுகள் நீங்கி புரிந்­து­ணர்வு அதி­க­ரிக்கும். இவை அனைத்தும் 02 ஆம் இட குருவால் உங்­க­ளுக்கு ஏற்­படும் நன்­மையே. ஒக்­டோபர் 04 இன் குரு­மாற்­றத்தால் குரு­ப­கவான் 3 ஆம் இடம் வரு­வதால் வருட இறு­தி­வரை எதிலும் கவ­னத்­துடன் நிதா­ன­மாக செயற்­ப­டு­வது உத்­தமம். 

பெண்­க­ளுக்கு சிறுதொழில், பண கொடுக்கல், வாங்­கல்கள் சாத­க­மாகும். சுப­கா­ரிய திரு­மண பலன்கள் உண்­டாகும். குடும்­பத்தில் உங்­களின் சில முயற்­சிகள் முன்­னேற்றம் தரும். 

மாண­வர்­க­ளுக்கு நன்­மையே, எனினும் மனக்­கட்­டுப்­பா­ட்டுடன் செயற்­பட்­டா­லேயே ஒக்­டோபர் 4 இன் பின் எண்­ணி­யதை சாதிக்­கலாம். 

பொன்­னாலை வர­த­ராஜப் பெரு­மாளை வழி­ப­டு­வ­துடன் மன­தாரப் பிரார்த்­தனை செய்­வது நன்மை தரும் 

கன்னி ரா­சி­யி­னை­யு­டைய உத்­தரம் 2, 3, 4 ஆம் பாதம், அத்தம், சித்­திரை 1, 2 ஆம் பாதம் கொண்ட உங்­க­ளுக்கு 100 – 55 வீதம் நன்­மை­யாகும்.

சித்­திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம்  பாதங்கள். 

கடந்த குரு மாற்றம் முதல் ஜன்ம  குருவும் 03 ஆம் இடத்தில் சனியும்  இருப்­பினும், வலு­வான  துலா  ரா­சி­யு­டை­யோரே   அச­ராது  இருங்கள்.  படிப்­ப­டி­யான  பெரும்  நன்­மையும்,  பாரிய சுப மாற்­றங்­களும் உண்­டாகும்.  ஒக்­டோபர்  4 இன்  குரு மாற்றம் 02 ஆம் இடத்­திற்கு வரு­வதால்  குரு  பகவான்  அதிக நன்மை  தரும் பலன்­க­ளையே செய்வார். 

வருட  ஆரம்பம் முதல்  ஒக்­டோபர் 4 வரை  உங்­களின்  கடின  முயற்­சியே  நன்மை  தரும். கடின உழைப்பு, ஓய்­வின்மை, உடல், தேக  ஆரோக்­கி­யத்தில் கவ­லை­யீனம்  பாதிப்பைத் தரலாம். எனவே  அதிக  யோச­னை­களைத் தவிர்த்து  உழைப்­புக்கு  நடுவே தேக ஆரோக்­கி­யத்­திலும்  மருந்து  மாத்­தி­ரை­களைப் பாவிப்­ப­திலும்  அதிக  கவனம் செலுத்­துக.  சமூ­கத்தில்  அந்­தஸ்து, கௌரவம்  அதி­க­ரிக்கும். சுய­கௌ­ர­வத்­துடன், தன்­மா­னத்­துடன் உறு­தி­யாக  செயற்­ப­டு­வீர்கள். மாண­வர்­களின்   கல்வி நிலையில்  முன்­னேற்றம்  உண்டு.  கலைத்­து­றையில்  சாதிக்கும் வாய்ப்பு  தேடி­வரும். 

பெண்கள்  தொழில், உத்­தி­யோக உயர்­வுக்­கான வாய்ப்பு வருட  நடுப்­ப­கு­தியின் பின் சாதகமாகும். சேமிப்பு  அதிக நற்­பலன்  தரும்.   வீட்டுச் செல­வுகள்  தலையைச் சுற்­றி­னாலும்  சந்­தோ­ஷ­மா­கவே  சமா­ளிப்­பீர்கள். கணவன்  மனைவி  வாக்­கு­வா­தங்­களை  தவிர்க்­கவும். 

 முருகப் பெரு­மானை  வழி­ப­டு­வ­துடன் மன­தார  பிரார்த்­தனை  செய்­வது  உத்­த­ம­மான பலன்­களைத் தரும். 

துலாம் ரா­சி­யி­னை­யு­டைய  சித்­திரை  3,4 ஆம் பாதம்,  சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம் கொண்ட உங்­க­ளுக்கு  100 க்கு 80 வீதம் உத்­த­ம­மாகும். 

விருச்­சிகம் 

விசாகம் 4 பாதம், அனுஷம், கேட்டை  

7 ½   சனி­யுடன் 12 இல்  வியாழன்  தொடர்­வது  வரு­டா­ரம்பம் முதல்  அக்­டோபர் 4 வரை  தொடர்­வதால்   வரவை மீறிய  செல­வீ­னங்­களும், கடன்  சுமை­களும், பண  முடக்­கமும்  நாளுக்கு  நாள் அதி­க­ரித்து சமா­ளிக்க முடி­யாது துவண்­டுபோய்  இருப்­பது  தொடர்ந்­தாலும்  உங்கள் விடா முயற்சி, இறை­வ­ழி­பாடு  என்­பன உறு­து­ணை­யாகும். 12 இல் குரு அக்­டோபர் 04 இல் ஜன்ம குரு­வாக  வரு­வதால்  இப்­போ­தைக்கு சுமார் 1 ½  வருடம்  அமை­தி­யாக, பொறு­மை­யுடன்   அக­லக்கால் வைக்­காமல்  ஒரு சிறிய   வட்­டத்­திற்குள்  சமா­ளிக்க  பழ­கிக்­கொள்­ளுங்கள். பொறுப்­பு­களை  கவ­ன­மாக  நிறை­வேற்­றுங்கள்.  பண விட­யங்­களில் அதிக நேர்­மை­யுடன் நட­வுங்கள்.  வீட்டில்  வீண்  வாக்­கு­வா­தங்­களைத்  தவிர்ப்­பது  பிரச்­சி­னை­களைக்  குறைக்கும்.  மாண­வர்கள் கல்­வியில்  அதிக அக்­க­றை­யுடன்  செயற்­பட வேண்­டிய  கால­மாகும்.  கல்­வியில்  மாத்­திரம் கவனம் தேவை.  வீண்  பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம்.  அவ­தானம். 

 பெண்கள்  வீட்டின் செலவைக்  கட்­டுப்­ப­டுத்­து­வது  அவ­சியம். வீட்டில்  அனை­வ­ரு­டனும்  அனு­ச­ரித்துச் செல்லும் மன­நிலை  நன்மை தரும்.  பணம், பொருள்  தவ­றலாம். எதிலும்  அதிக கவனம்  தேவை.  வயது முதியோர் தேக   ஆரோக்­கி­யத்தில் அதிக  கவனம் செலுத்­து­வ­தோடு  தேவை­யில்­லாத  குடும்ப, வீட்டு  விட­யங்­களில் தலை­யி­டாது  செயற்­ப­டு­வது  மன நிம்­மதி தரும். 

திரு­கோ­ண­மலை லக்ஷ்மி  நாரா­யணப்  பெரு­மாளை ஒரு முறை  தரி­சனம் செய்­வ­தோடு  மன­தார  பிரார்த்­தனை  செய்ய இன்­னல்கள் நீங்கி  அருள்  உண்­டாகும்.

விருச்­சிக  இரா­சி­யி­னை­யு­டைய  விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை  நட்­சத்­தி­ரங்­க­ளை­யு­டைய நேயர்­களே இவ் விளம்பி வருடம்  100%க்கு 35% வீத நன்­மையே  ஆகும். எனினும்  உங்கள்  முயற்சி  இறை அருள் தரும். 

தனுசு 

மூலம், பூராடம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம் 

ஏழரைச் சனி நடை­பெற்­றாலும் 11 இல் குரு சஞ்­ச­ரிப்­பதால்  வருட ஆரம்பம் முதல் அக்­டோபர் 4 வரை  எந்த சிக்­கல்­க­ளையும்  மன­வ­லி­மை­யுடன்  சமா­ளிப்­பீர்கள். தொழில், வியா­பா­ரத்தில் அதி­க­பட்ச உற்­சா­கத்­துடன் செயற்­பட்டு இனி வரக்­கூ­டிய  ஆறு மாத  காலப்­ப­கு­தியில்  அடை­யக்­கூ­டிய  அதி­க­பட்ச நற்­ப­லன்­களை உங்கள்  முயற்­சியால்  பெறலாம். குறு­கி­ய­கால முத­லீ­டுகள்  நன்மை தரும். உத்­தி­யோகம் பார்ப்போர் அதிக பொறுப்­பு­ணர்ந்து  கட­மையில் அதிக  சிரத்­தை­யுடன்  செயற்­ப­டு­வது  உத்­தமம். தேச ஆரோக்­கியம்  பாதிப்­பில்லை எனினும்  தொழில், பண விட­யங்கள் எதிர்­வரும்  மாதங்­களில் யோசனை  தரும். 

மாண­வர்கள்  வருட  ஆரம்­பத்தில்  காணப்­படும்  அதே  உற்­சா­கத்­துடன்  தொடர்ந்து  இரண்டு  வரு­டங்கள் கூடுதல்  கவனம் செலுத்தி  படிப்­ப­துவே உயர்வு தரும். 

பெண்கள்  சிறு முத­லீ­டுகள், கைத்­தொழில் விட­யங்­களில் கவனம் செலுத்த,  அதனால்  வரு­மானம் ஏற்­படும்.  வீட்டுப் பொறுப்­பு­களை  பகிர்ந்து  கொண்டு செயற்­பட  பிரச்­சி­னைகள்  குறையும். யாருக்கும் பிணை நிற்­பது, பணம் வாங்­கிக்­கொ­டுப்­பது  போன்ற  விட­யங்­களில்  ஈடு­பட  வேண்டாம்.  எந்த விட­யத்­திலும்  யாருக்கும்  வாக்­கு­றுதி   வழங்­கா­தீர்கள். 

சுப­கா­ரிய திரு­மண  பலன்­களை  எதிர்­பார்ப்போர்  சில விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு மத்­தியில் அதிக  முயற்சி  செய்தால் தடை, தாம­தங்கள்  நீங்கி  சுப­கா­ரிய  பலன்கள்  சாத்­தி­ய­மாகும்.  தனிப்­பட்ட  ஜாதக  பல­னின்­படி வழி­பாடு,  பரி­காரம் என்­பன  உத்­தமம். 

உலகம்  துதிக்கும் அலங்­காரக் கந்­தனாம் நல்லூர்  முரு­கனை ஒரு­முறை நேரில்  சென்று தரி­சிப்­ப­துடன் மன­தார  பிரார்த்­தனை  செய்ய,  எதிர்­காலம்  நலன்­பெறும். 

தனுசு இரா­சி­யி­னை­யு­டைய  மூலம்,  பூராடம்,  உத்­த­ராடம்  01 ஆம் பாத நேயர்­களே  இவ்  விளம்பி வருடம்  உங்­க­ளுக்கு  100% க்கு 60% நன்­மை­யாகும். 

மகரம் 

உத்­த­ராடம்  2,3,4 ஆம் பாதம் திரு­வோணம்,  அவிட்டம் 1ஆம், 2 ஆம் பாதம் 

வருட  ஆரம்பம் முதல் 7 ½  சனி  தொடர்­வ­தாலும் குரு 10 இல் சஞ்­ச­ரிப்­ப­தாலும்  தடை, தாம­தங்கள்,  வீண்­வி­ர­யங்கள், செல­வீ­னங்கள்,  இட­மாற்­றங்கள் என்­பன அதிக மன­வி­ரக்­தியை  இது­வரை   தந்­தாலும் அக்­டோபர்  4 இல்  குரு மாற்றம்   11 க்கு  வரும் குருவால் சற்று  ஆறுதல் தரும்.  அது­வரை  தேவை­யில்­லாத விட­யங்­களில்  தலை­யி­டாது.  அவ­தா­னத்­துடன்  செயற்­ப­டுங்கள்.  குடும்­பத்தில், வீட்டில் எதையும்  பொறு­மை­யுடன்   கையாள்­வது  புத்­தி­சா­லித்­த­ன­மாகும். புதிய தொழில் முயற்சி, பணம்  செலவு  செய்து  எதிர்­பார்ப்­பு­ட­னான  பெரிய  தூர­தேச  பிர­யாணம்,  பயணம் வேண்டாம். 

 மாண­வர்கள்   கல்­வியில் வருட ஆரம்­பத்தில் அதிக  கவ­னத்­துடன்  செயற்­பட வேண்டும். மன, புலன்  அடக்கம்  அவ­சி­ய­மாகும். காணி, வீடு,  மனை  விட­யங்கள்   வாங்­கு­வது, விற்­பது  பாத­க­மா­கலாம்.  கோட்,வழக்­குகள் என்­பன தொடர்ந்து  இழு­ப­றி­யா­கவே இருக்கும். 

பெண்­களே, உங்கள்  கவ­லை­யீ­னத்தால் பணம், பொருள்  இழப்­புகள் ஏற்­ப­டலாம். தேக ஆரோக்­கி­யத்தில்  கவனம் தேவை.  மருத்­துவ செல­வு­களும்  கூடும். தேவை­யற்ற  பிர­யாண, பயண  செல­வுகள் ஏற்­ப­டலாம். 

திரு­மண  சுப­கா­ரிய   நற்­ப­லன்­களை  எதிர்­பார்த்து காத்­தி­ருப்­போ­ருக்கு அக்­டோபர் 04 ஆம் திகதி குரு மாற்றம் சுமார் ஒரு வரு­டத்­திற்குள் நற்­பலன் தரும். 

மட்­டக்­க­ளப்பு, மயி­லம்­பா­வெளி  ஸ்ரீ காமாட்சி  அம்­பாளை  ஒரு முறை  நேரில்  சென்று தரி­சனம் செய்­வ­துடன் மன­தார வேண்டி பிரார்த்­திக்க பிரச்­சி­னைகள் குறைந்து நன்மை உண்­டாகும். 

மகர இரா­சி­யி­னை­யு­டைய  உத்­த­ராடம் 2,3,4 ஆம் பாதம், திரு­வோணம்,  அவிட்டம் இரா­சி­க­ளை­யு­டை­யோ­ருக்கு  இவ் விளம்பி  வருடம்  100% க்கு 60% நன்­மை­யாகும். 

கும்பம்

அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்­டாதி 1,2,3 ஆம் பாதங்கள்.

 வருட ஆரம்பம் முதல் குரு பகவான்  9 ஆம்  வீட்­டிலும்  சனி  11 ஆம் வீட்­டிலும்  சஞ்­ச­ரிப்­பது சாத­க­மாகும்.  திட்­ட­மிட்­ட­படி  வியா­பார, தொழில், உத்­தி­யோக  விட­யங்­களில் சாதிப்­பீர்கள்.  பண­வ­ரவு  திருப்தி தரும். தேக ஆரோக்­கியம் உற்­சாகம் தரும்.  தடைப்­பட்டு வந்த  சில  பூர்­வீகச் சொத்து விட­யங்கள் சாதக பலன் தரும்.  வெளி­நாட்டு தொடர்­புகள்  தொழில்  மேன்­மைக்­கான  வாய்ப்­பாகும்.  உயர் அதி­கா­ரி­களின்  பாராட்டு, பதவி உயர்­வுக்­கான  வாய்ப்­பைத்­தரும்.

 மாண­வர்­க­ளுக்கு நன்­மையே  எனினும்  தொடர்ந்து அக்­க­றை­யுடன்  செயற்­பட,  வருட பிற்­ப­கு­தியில்  நற்­பலன்  தரும்.  கணனி மற்றும்  நவீன  தொழிற்­து­றைக்­கான  பயிற்­சிகள்  நன்மை தரும். சேமிப்­புகள்  வீட்டில் பெரும்  உத­வி­யாகும்.  பெண்கள் தமது  சுய முயற்­சி­யுடன்  செய்யும்  தொழில்  முயற்சி  இலாபம் தரும்.

 சுப­கா­ரியம், திரு­ம­ணத்­த­டைகள் விலகும். வெளி­நாட்டு  வரன்  சம்­பந்­தங்கள்  பேசி வரும்.  அதிக  சிரத்­தை­யுடன்   செயற்­பட்டால்  அக்டோபர்  4 க்கு இடையே  சுபகாரிய திருமண பலன்  கைகூடும். 

 முதியவர்கள்  தொடர்ந்து  தாம் பாவித்து வரும்  மருந்து மாத்திரைகளுடன்  உடற்பயிற்சி, தியானம்  என்பன  செய்துவர எதிர்காலம் நன்மை தரும்.

 மாத்தளை  முத்துமாரி அம்பாளை  நேரில் சென்று  தரிசனம்  செய்வதோடு  மனதார  பிரார்த்தனை  செய்தால்  இம்மையிலும்  நன்மை உண்டாகும்.

 கும்ப ராசியினுடைய  அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதத்தினரே  உங்களுக்கு  இவ் விளம்பி  வருடம் 100% க்கு 60% நன்மையே. 

மீனம் 

 பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி.

 வருட ஆரம்பம்  முதலே  அட்டமத்து  வியாழனும்  10 இல் சனியும்   தொடர்வது  காரியத்தடை, வீண் விரயங்கள், செலவீனங்கள், பிரயோசனம்  இல்லாத  பிரயாண பயணங்கள், புதிய  திட்டங்களில்  இழுபறி நிலை என்பன  தொடரும்.  எனவே  யாரையும் நம்பி பண, பொருள், வீட்டு விடயங்களில் கொடுக்கல்– வாங்கல்கள் செய்வது பாதகமாகலாம். தீர்மானங்கள்  எடுப்பதில்  மனக்குழப்பம் ஏற்படும். உறவுகளிடையே, நண்பர்களிடையே  கருத்து வேறுபாடு மனவேதனை தரும். தொழில்  வியாபாரமும் மோசமாக  பாதிக்கப்படலாம்.

 மாணவர்கள்  மேலதிகமாக  நேரத்தை  ஒதுக்கி  அதிக நேரம்  அக்கறையுடன்  செயற்பட்டாலேயே  ஒரளவு  பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம்.

 உறவுகள்  பாதிக்கப்படும் வகையில்  வீட்டில்  பெண்கள்  வீண் வாக்கு வாதங்களில்  ஈடுபடுவது  பாதகமாகும். வீண் கோபத்தைத்  தவிர்க்கவும். யாரையும்  நம்பி  பண கொடுக்கல்  வாங்கல் செய்வது  நஷ்டமாகும். 

 எனினும்  அக்டோபர் 04 இன் பிறகு படிப்படியாக  மேற்படி  பலன்களில்  மாற்றம்  உண்டாகும். தடை தாமதங்கள் விலகும். எதிர்காலம் தொடர்பில்  சற்று நம்பிக்கை உண்டாகும்.

 திருமண விடயங்கள்  அக் 4 இன் பின் சுமார்  ஒரு வருடத்திற்குள்  நிறைவேறும். பழைய பாக்கி, கடன் வந்து சேரும்.

 கதிர்காம  கத்தனை ஒருமுறை  நேரில்  சென்று  தரிசிப்பதுடன்  மனதார  பிராத்தனை செய்ய எதிர்காலம் நற்பலன்கள்  நிறைந்ததாகும். 

மீனம் இராசியினையுடைய  பூரட்டாதி 4 ஆம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி இந் நட்சத்திரத்தையுடைய  நேயர்களே  உங்களுக்கு  இவ் விளம்பி  வருடம் 100% க்கு 65 நன்மையாகும்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25
news-image

பன்னிரண்டு ராசிக்காரர்கள் தவிர்க்கவேண்டிய புனித தல...

2024-03-18 18:20:55
news-image

வாழ்க்கையில் வெற்றியைத் தொடங்கி வைக்கும் பைரவர்...

2024-03-16 14:37:58
news-image

கிணற்று நீரை பிரசாதமாக வழங்கும் ஸ்ரீ...

2024-03-14 18:28:51
news-image

2024 - 'குரோதி' தமிழ் புத்தாண்டு...

2024-03-14 10:09:46
news-image

மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானின் அருளை...

2024-03-08 17:36:48
news-image

சகல செல்வங்களையும் அருளும் அன்னை சுந்தர...

2024-03-05 22:01:39
news-image

பணத்தை ஈர்க்கக் கூடிய பலூன் பரிகாரம்

2024-03-04 16:33:43
news-image

தந்தை - மகன் இடையேயான கருத்து...

2024-03-03 07:04:58
news-image

சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான இறை வழிபாட்டு...

2024-03-01 19:13:04
news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20