எம்மில் பலருக்கும் பலவித பயம் மனதில் இருக்கும். தேர்வு சமயங்களில் சில மாணவர்களுக்கு தேர்வு எழுத பயம் இருக்கும். சிலருக்கு தண்ணீரைக் கண்டால் பயம் இருக்கும். அதிலும் ஒடும் நதி அல்லது பரந்துவிரிந்த கடல், சோவென கொட்டும் அருவி இதனைப் பார்த்தாலே பயம் ஏற்படும். ஒரு சிலருக்கு உயரத்தைக் கண்டால் பயம் இருக்கும். அதே போல் தற்போது வளர்ச்சியடைந்த ஒரு தொழில்நுட்பத்தால் மக்கள் பயங்கொள்கிறார்கள்.
அதாவது நவீன காலங்களில் உருவாகும் புதிய வணிக வளாகங்களில் நகரும் மின் படிக்கட்டுகள் எனப்படும் எஸ்கலேற்றர் அமைக்கப்படுவது பெசனாகிவிட்டது. இதில் பயணிக்க பலருக்கும் ஆசையிருந்தாலும், மனதில் பயம் இருக்கிறது. இந்த பயத்திற்கு உளவியல் மருத்துவத்துறை எஸ்கலோ போபியா என்று பெயரிட்டிருக்கிறது. இந்த பயத்தை எளிதாக கடந்துவிடலாம் என்றாலும், அந்த பயம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த பயம் தற்போது உளவியல் காரணங்களால் மட்டுமின்றி உடல் ஆரோக்கிய கேடுகளாலும் இந்த பயம் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக பார்வை நரம்புகளில் பாதிப்புள்ளவர்கள், நரம்பியல் கோளாறுகளால் கை நடுக்கம் உள்ளவர்கள் இத்தகைய பயத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு முறையாக ஆலோசனையும், பயிற்சியும் எடுத்தால் இந்த பயத்தை வென்றுவிடலாம். ஆனால் இந்த பயத்தை எப்பாடுபட்டாவது வென்றுவிடவேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் உருவாகும் சிறிய நடுத்தர வணிக வளாகங்களிலும், நட்சத்திர ஹொட்டேல்களிலும் நகரும் மின் படிக்கட்டுகள் மட்டுமே இடம்பெறலாம். அப்போது ஏற்படும் சூழலை எதிர்கொள்ள இப்போதே தயாராவோம்.
இந்த எஸ்கலோ போபியாவிலிருந்து விடுபட உங்களுக்கு நம்பிக்கையை துணையுடன் ஒன்றிற்கு பல முறை இந்த நகரும் மின் படிக்கட்டுகளில் ஏறியும், இறங்கியும் பயிற்சி எடுத்தால் மனம் தெளிவடையும்.
டொக்டர் ராஜ்மோகன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM