இலங்கை கிரிக்கெட் சபை­யினால் ஏற்­பாடு செய்­யப்பட்டு சுப்பர் ப்ரொவென்­ஷியல் கிரிக்கெட் தொடரின் பக­லி­ரவுப் போட்­டிகள் இரண்டு இன்று நடை­பெ­ற­வுள்­ளன. இளஞ் சிவப்பு நிற பந்தில் விளை­யா­டப்­படும் இந்த போட்­டிகள் இன்று பிற்­பகல் 2 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

இதில் காலி அணிக்கும் தம்­புள்ளை அணிக்கும் இடை­யி­லான போட்டி தம்­புள்ளை மைதா­னத்­திலும், கொழும்பு அணிக்கும் கண்டி அணிக்கும் இடை­யி­லான போட்டி ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்­திலும் நடை­பெ­ற­வுள்­ளன.

4 நாட்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சுப்பர் ப்ரொவென்­ஷியல் கிரிக்கெட் தொடர் கடந்த 30 ஆம் திக­தி­யன்று ஆரம்­ப­மா­னது. இதில் கொழும்பு, காலி, கண்டி, தம்­புள்ளை ஆகிய நான்கு அணிகள் விளை­யாடி வரு­கின்­றன. இதன் முத­லிரு போட்­டி­களில் சுரங்க லக்மால் தலை­மை­யி­லான காலி அணி தினேஷ் சந்­திமால் தலை­மை­யி­லான கொழும்பு அணியை எதிர்த்­தா­டி­யது.

மற்­றைய போட்­டியில் தம்­புள்ளை அணியை கண்டி அணி எதிர்த்­தா­டி­யது. காயம் கார­ண­மாக முதல் போட்­டியில் பங்­கேற்­காத கண்டி அணித்­த­லை­வ­ரான எஞ்­சலோ மெத்­தியூஸ் இன்­றையப் போட்­டியில் கள­மி­றங்­குவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.