ஐ.பி.எல். ; விறுவிறுப்பாக போட்டியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை 

Published By: Priyatharshan

08 Apr, 2018 | 07:56 AM
image

ஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

ஐ.பி.எல். 11 ஆவது தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. 

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி களத்தடுப்பை தேர்வு செய்தார். 

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், எவின் லெவிசும் களமிறங்கினர். 

லெவிஸ் டக் அவுட் ஆனார். ரோகித் சர்மா 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய இஷான் கிஷானும், சூர்யகுமார் யாதவும் இணைந்து ஓட்டங்களை குவித்தனர். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ஓட்டங்களையும்  இஷான் கிஷான் 29 பந்தில் 40 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்களை எடுத்தது. ஹர்திக் பாண்டியா 21 ஓட்டங்களுடனும்  குருணல் பாண்டியா 41 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சில் வொட்சன் இரண்டு விக்கெட்களும், இம்ரான் தாஹிர், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வொட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர்.

ஆட்டத்தின் 4 ஆவது ஓவரில் ஷேன் வொட்சன் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து 6 ஆவது ஓவரில் சுரேஷ் ரெய்னா 4 ஓட்டங்னகளில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அம்பதி ராயுடு 22 ஓட்டங்களுடன் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய  தோனியும் நீடிக்கவில்லை. அவர் 5 ஓட்டங்களுடன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 51 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.

கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுமையாக விளையாடியது. அணியின் எண்ணிக்கை 75 ஆக உள்ளபோது ஜடேஜாவும் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாஹர் டக் அவுட் ஆனார். சென்னை அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி 7 ஓவரில் 82 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன் 8 ஓட்டங்களுடனும், மார்க் வுட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

பிராவோ மட்டும் தனியாக நின்று போராடினார். இவர் ஐபிஎல் தொடரின் முதல் அரை சதமடித்து அசத்தினார். இவர் 30 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ஓய்வுபெற்று வெளியேறிய கேதார் களமிறங்கினார். கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்துகளில் ஓட்டம் ரன் எடுக்கவில்லை. 4 ஆவது பந்தில் ஒரு சிக்சரும், 5 ஆவது பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் கேதார் ஜாதவ் 24 ஓட்டங்களுடனும்  இம்ரான் தாஹிர் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் மயங்க் மார்கண்டே 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், முஸ்டாபிசுர் ரகுமான், பும்ரா, மெக்லனேகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26
news-image

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது...

2025-02-02 18:27:38
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக்...

2025-02-02 15:26:25
news-image

19 இன் கீழ் மகளிர் ரி...

2025-01-31 22:03:14
news-image

இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள்...

2025-01-31 21:55:29