ஜெர்மனியில் தாக்குதல் :  4 பேர் பலி : தாக்குதலை மேற்கொண்டவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published By: Priyatharshan

08 Apr, 2018 | 07:45 AM
image

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனக்கூட்டத்திற்குள் வாகனமொன்றை செலுத்தி தாக்குதல் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனிக்கிழமை மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் கழித்துக் கொண்டிருந்தனர். அங்குள்ள வீதியொன்றைக் கடப்பதற்காக பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று வீதியைக் கடக்கவிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்ட வாகன சாரதியுட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் 30 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட வாகனத்தை ஓட்டி வந்த சாரதி, மக்கள் கூட்டத்தின் மீது மோதியதும் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இதுவொரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜெர்மன் பிரஜையென முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50