தேசிய ரீதியில் மிகச்­சி­றந்த பங்­க­ளிப்­பு­களை வழங்கும் குவைத் எயார் வேஸ் புதி­தான பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை Boeing 777 விமா­னத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்தவகையில் குறித்த விமா­னத்தில் பய­ணி­களின் நலன்­க­ருதி முதலாம் வகுப்பு அறை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் அடுக்­கு­முறை சார் திட்­டங்­க­ளின்­ப­டியும், பய­ணி­களின் பாது­காப்பு நலன் கரு­தியும், வச­தி­வாய்ப்­பு­க­ளுடன் கூடிய வகையில் மேற்­கு­றித்த வச­தி­வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நியூ­யோர்க்­கி­லி­ருந்து லண்­ட­னுக்கு செல்லும் விமான சேவை­யி­னூ­டாக குறித்த விசேட சேவை ஆரம்பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கி­டை­யிலும் இச்­சேவை விருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது.

குவைத் எயார்வேஸ் தனது முதல் வகுப்பு பிர­யா­ணி­க­ளுக்கு சலு­கை­ய­டிப்­ப­டை­யி­லா­னதும், அர­வ­ணைப்­புடன் கூடி­ய­து­மான பல திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளது. ஏற்­க­னவே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து முற்­றிலும் மாறு­பட்ட வகை­யிலும், பிர­தேச போட்­டி­யா­ளர்­க­ளுக்கு சவால் விடும் வகை­யிலும் முதல் வகுப்பு பிர­யா­ணி­க­ளுக்கு ஆசன வச­தி­களை வடி­வ­மைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.மேலும் குவைத் எயார்வேஸ் விடுத்­தி­ருந்த பல கட்­டுப்­பா­டு­க­ளுக்கு புறம்­பாக ஒக்­டோபர் மாதம் பத்து Boeing 777 விமா­னங்­களை கொள் வனவு செய்யவுள்ளமை குறிப்பி டத்தக்கது.

அதுமட்டுமல்லாது குவைத் எயார்வேஸ் தற்போது புதிய ஐந்து எயார்பஸ் A330 ரக விமான ங்களை கடற்படைக்கு வழங்கவு ள்ளமையும் விசேட அம்சமாகும்.