மகளை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி தலை­ம­றை­வாக இருந்து வந்த தந்தை ஒரு­வரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட நபரை கம்­பளை மாவட்ட நீதி­மன்ற நீதவான் சாந்­தினி மீ கொட முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது அவரை எதிர்­வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

கம்­பளை அலா­கம கிரா­மத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் இச் சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சம்­ப­வ­தினம் பாதிக்­கப்­பட்ட 18 வயது யுவ­தியின் தாய் சிறிய மக­ளுடன் கடைக்குச் சென்­றி­ருந்த நிலையில் குறித்த யுவதி 38 வயது தந்­தை­யுடன் வீட்டில் தனி­யாக இருந்­துள்ளார்.

இச் சந்­திர்ப்­பத்­தி­லேயே குறித்த யுவதி வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக மேற்­படி யுவ­தியின் தாயினால் கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. சந்­தேக நபர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியப்போதே மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.