(அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)
21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவரை ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் மூன்று பதக்கங்களை வென்று விளையாடி வருகின்றது.
இந்த மூன்று பதக்கங்களும் பளுதூக்கல் போட்டியிலேயே இலங்கை வென்றது.
அவுஸ்திரேலியாவின் குயிண்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்கட் கோஸ்ட் நகரில் 21ஆவது கொமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 71 அணிகள் போட்டியிடும் இந்தத் தொடர் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணி பல பிரிவுகளில் பேட்டியிட்டு வருகின்றது.
நேற்றைய பேட்டியின் மூன்றாவது நாளில் இலங்கை பொதுநலவாய அணிக்கு தலைமையேற்ற பளுதூக்கல் வீரர் சிந்தன கீதால் விதானகே பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் சிந்தனவினால் 5ஆவது இடத்திற்கே வரகிடைத்தது. இதில் இந்திய வீரர் வெற்றிபெற்றார்.
77 கிலோ கிராம் எடைப் பிரிவில் நடைபெற்ற போட்யில் இலங்கையின் சிந்தன கீதால் விதானகே போட்டியிட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த சிந்தன, நேற்று தனது முதல் தடவையில் 130இல் ஆரம்பித்தார். அதன்பிறகு பாரத்தை 132ஆக அதிகரித்தார். ஆனாலும் அந்த வாய்ப்பை சிந்ஜேக் பிரிவில் 166 கிலோ கிராம் எடையை தூக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இதில் கடும் போட்டி நிலவியது இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும்தான். இறுதியில் இந்திய தமிழ்நாடு வீரர் சதீஸ்குமார் சிவலிங்கம் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார். வெள்ளிப் பதக்கத்தை இங்கிலாந்து ஜாக் ஒலிவர் வெல்ல, வெண்கலத்தை அவுஸ்திரேலியாவின் எட்டோண்டி வென்றார்.
போட்டி குறித்து கருத்து தெரிவித்த சிந்தன,
" நான் ஆரம்பத்திலேயே தெரிந்துவைத்திருந்தேன் அவுஸ்திரேலிய வீரருடன்தான் மல்லுக்கட்டவேண்டும் என்று. ஆனாலும் துரதிஸ்டவசமாக ஐந்தாவது இடத்திற்கு வந்தது கவலையளிக்கிறது. இங்குள்ள காலநிலையுடன் பயிற்சிகளை மேற்கொள்வதில் சற்று சிரமத்தை உணர்ந்தேன். பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் ஒன்றை வெல்ல முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. ஆனாலும் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் ஒன்றை எப்படியும் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு" என்றார்.
இதேவேளை 4,100 ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.
இன்று பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் அனுஸா கொடிதுவக்கு களம் காண்கின்றார். இவர் 45 - 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் முதலாவது காலிறுதியில் கைமன் தீவு வீராங்கனை பிரண்டி பார்ஸை எதிர்கொள்கிறார். 39 வயதாகும் அனுஸா கொடிதுவக்கு இதற்கு முன் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்சாயி விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதியில் உலக சம்பியனான இந்தயாவின் மேரிகோமிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM