ஆகஸட் மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகளிற்கான இயக்குநராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான ரசல் ஆர்னோல்ட் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன..
சுதந்திரக் கிண்ணப்போட்டிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் எங்கள் பெரும் ஆர்வத்திற்குரிய விடயமாக லங்கா பிரீமியர் லீக் காணப்படுகின்றது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாங்கள் ரசல் ஆர்னோல்டை இயக்குநராக நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி உலகம் முழுவதும் இடம்பெறும் லீக் போட்டிகள் குறித்து ஆர்னோல்டிற்கு சிறந்த அனுபவம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பத்தாம் திகதி இது தொடர்பில் அவருடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்கில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இடையில் சிறந்த உறவு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரர்களை எங்கள் லீக் போட்டிகளில் விளையாடச்செய்ய முடியும் என கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM