உயிரிழந்த தாயின் உடலை மகன் வெட்டி துண்டு துண்டாக்கி அதை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கோபால் சந்திர மஜும்தாரின் மனைவி பினா மஜும்தார் இந்திய உணவுக் கழகத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் சுபப்பிரதா மஜும்தார்.
தாய், தந்தை இருவரும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பினா மஜும்தார் 2015ஆம் ஆண்டு வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
ஆனால் உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கோபால் சந்திர மஜும்தாருக்கும் அவ்வளவாக நெருக்கம் இல்லாததால் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனிடையே சந்திர மஜும்தார் வீட்டுக்கு மிகப்பெரிய குளிர்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அவரது வீட்டின் கீழ்தளம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகவே சடலத்துடன் சந்திர மஜும்தாரும், சுபப்பிரதா மஜும்தாரும் இருந்து வந்துள்ளனர்.
சுபப்பிரதாவின் நடவடிக்கையில் சந்திர மஜும்தாரின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டு பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா பொலிஸார் சுபப்பிரதா வீட்டை சோதனையிட்ட போது குளிர்சாதனப் பெட்டியில் பினாவின் உடல் துண்டு துண்டாக வெட்டி பதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் சுபப்பிரதாவைக் கைது செய்தனர். உடல்நலக் குறைவால் சந்திர மஜும்தாரை கைது செய்யாமல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலைக்காட்சியில் செய்திப்படம் பார்த்து இதுபோன்று தான் செய்ததாக சுபப்பிரதா கூறியுள்ளார். மேலும் தாய் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் உடலைப் பாதுகாத்து வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM