இந்தியன் பிரிமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல். தொடர் இன்று மிக கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இத் தொடர் இன்று முதல் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரு வருட தடைகளின் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி தலைமையிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பென் ஸ்டொக் தலைமையிலும் களமிறங்க உள்ளது கூடுதல் சுவாரஸ்யமாகும்.
அத்தோடு அடுத்ததடுத்த அணி மாற்றங்கள் விரர்களின் விபரங்கள் என பரபரப்பிற்கு குறைவில்லாமல் இம் முறை ஜ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ளது.
இத் தொடரின் முதல் போட்டியானது நடப்பு சம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரு வருடங்களின் பின் புதுப் பொலிவோடு டோனி தலைமையிளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இவ்வாருட ஐ.பி.எல் சுவாரஸ்யங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்க மருபுறம் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
காவிரி மேலான்மை மற்றும் அணுவாலை அமைப்பதற்கு எதிராகவும் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றன.
இதற்கிடையில் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளன. இது குற்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினரும் காவிரி உரிமை மீட்பு குழுவினரும் சென்னையில் ஐ.பி.எல்லை நடத்தக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மையை அமைத்து தர முடியாத அரசு கிரிகெட் நடத்த அனுமதியளித்துள்ளது. இங்கு விவசாயிகள் கண்ணீர் விட்டு கொண்டிருகின்றனர், குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க உங்களுக்கு கிரிகெட் அவசியமா? அப்படி ஐ.பி.எல்லை சென்னையில் நடத்தினால் நாங்கள் மைதானதிற்குள் புகுந்து கலவரம் செய்வோம், என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேலளை தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்தும் தற்போது பல சர்சைகள் எழுந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்தாலும் நாட்டு மக்களை சிந்திக்கும் போது வேதனையாகவும் உள்ளது. இங்கு பணம் படைத்தவருக்கே முதல் மரியாதை என்பது இவர்களது செயற்பாடுகளிலேயே தெரிந்துவிட்டது.
கிரிகெட் ஒரு போட்டி என்ற எண்ணம் போய், அது பணத்தை வைத்து விளையாடும் சூதாட்டம் என்ற எண்ணம் மக்களிடையே வந்துவிட்டது.
இது குறித்து இந்திய அரசு தமது உரிமைகளுக்காக போராடும் மக்களுக்காக குரல்கொடுக்குமா ? அல்லது பணம் முதலைகளுக்கு பின் சென்று வாயடைத்து நிற்குமா ? என்பது வெறும் காணல் நீராகவே தோன்றுகின்றது....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM