ஊழல் வழக்கு தொடர்பாக தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் 75 வயதான ஜேக்கப் ஜுமா  நேற்று டர்பன் நகர நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2009 முதல் 2018 பெப்ரவரி வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஜுமா பதவி வகித்தார். அவரது ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஜுமாக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதனால் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி  ஜுமா பதவி விலகினார்.

இந்நிலையில் ஆயுத பேர ஊழல் தொடர்பான வழக்கில் டர்பனில் உள்ள நீதிமன்றத்தில் ஜேக்கப் ஜுமா நேற்று ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு ஜூன் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரனையின் பின்னர் ஜுமா ஊடகங்களிடம் "நான் நிரபராதி" என்று தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை ஜுமாக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.