11ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
இன்றைய முதல் நாளில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸும், முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸும் மோதுகின்றன.
கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஐ.பி.எல். போட்டிகளானது வெற்றிகரமாக 11ஆவது தெடரை எட்டியுள்ளது.
8 அணிகள் போட்டியிடும் இந்தத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் களம் காண்கின்றன. இம்முறை ஆடப்போகும் அணிகளின் பலம் பலவீனத்தைப் பற்றி பார்ப்போம்.
சென்னை சுப்பர் கிங்ஸ்
டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை பங்கேற்றுள்ள 8 ஐ.பி.எல். தொடர்களிலும் அரையிறுதியை அதாவது பிளே-ஓப் சுற்றை எட்டிய ஒரே அணி சென்னை தான். சூதாட்ட சர்ச்சையால் 2 ஆண்டு கால தடைக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ளது.
அத்தோடு அனுப வீரர்களான டோனி, சுரேஷ் ரெய்னா, வொட்சன், டு பிளிஸ்சிஸ், கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, முரளி விஜய், அம்பத்தி ராயுடு, பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா என்று வலுவான துடுப்பாட்ட வரிசையும் சென்னை அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல்.இல் நாங்கள் என்றுமே கிங் தான என்பதை நிரூபிக்கும் உத்வேகத்தில் சென்னை அணி இன்று தனது புதிய பயணத்தை தொடங்குகிறது.
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மாவின் தலைமையிலும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் மஹேல ஜயவர்தனவின் பயிற்சியின் கீழும் பலமான அணியாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ். 3 முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. இதுவரை 91 போட்டிகளில் வெற்றி கண்டுள்ள அந்த அணி இந்த தொடரில், 100 வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் இவர்களோடு ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சில் பும்ரா, முஸ்தாபிகுர் ரஹ்மான், மெக்லெனஹான், கம்மின்ஸ் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.
பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்
விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களுரு அணி கடந்த ஆண்டு 3 போட்டிகளில் மட்டுமே வெறறிபெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அப்போது அணியில் கெய்ல் டிவிலியர்ஸ் கோஹ்லி என்று அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தது. பெங்களுரு அணி இந்தமுறை நிச்சயம் எழுச்சி பெறும் வகையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைச்சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அந்த அணிக்கு இன்னும் ஐ.பி.எல். மகுடம் கிட்டவில்லை.
இம்முறையும் டிவில்லியர்ஸ், இளம் வீரர் சர்ப்ராஸ் கான், கோரி அண்டர்சன், பிரன்டன் மெக்கலம், டி கொக் என்று அதிரடி துடுப்பாட்ட வீரர்களுக்கு பஞ்சமில்லை. இதே போல் யுஸ்வேந்திர சாஹல், வொஸிங்டன் சுந்தர், மொயீன் அலி என்று சுழற்பந்து வீச்சாளர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தற்போதைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான தினேஷ் கார்த்திக்கின் அணிதான் கொல்கத்தா. 2 முறை கிண்ணத்தை வென்றுத்தந்த கௌதம் கம்பீரை ஓரங்கட்டிவிட்ட கொல்கத்தா அணி நிர்வாகம் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக்கை தலைவராக்கியிருக்கிறது.
கொல்கத்தா அணியின் பலமே சிக்கனமாக பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் தான். தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியும் காட்டக் கூடியவர். பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் கிளம்பியதால் இங்கு கவனமாக பந்து வீச வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். ஏற்கனவே காயத்தால் மிட்செல் ஸ்டார்க் பின் வாங்கிய நிலையில், காயத்திலிருந்து ஓரளவு மீண்டு வந்துள்ள அதிரடி வீரர்களான கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் மறுபடியும் காயமடைந்தால் கொல்கத்தாவுக்கு சிக்கல் தான்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மற்றொரு தமிழக வீரரை தலைவராகக் கொண்ட அணிதான் கிங்ஸ்லெவன் பஞ்சாப். பஞ்சாப் அணி தங்களது 11ஆவது தலைவராக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை நியமித்திருக்கிறது. இந்த தொடரில் தலைவராகும் ஒரே பந்துவீச்சாளர் இவர் தான். அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு விலை போன கிறிஸ் கெய்ல், யுவராஜ்சிங் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினால் எதிரணிகள் அஞ்சிவிடுவர். ஆனால் கடந்த சில போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தாத அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கேள்விக்குறி தான். ஆரோன் பிஞ்ச், லோகேஷ் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், ஸ்டோனிஸ் என்று துடுப்பாட்ட வரிசையில் தொய்வு இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு குறையே.
டெல்லி டேர்டெவில்ஸ்
டெல்லி அணி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (82 தோல்விகள்), இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். கௌதம்; கம்பீர் மீண்டும் சொந்த ஊர் அணிக்கு திரும்பியதுடன், அணியை வழிநடத்தும் பொறுப்பையும் பெற்றிருக்கிறார். பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் இருப்பது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். இந்த கூட்டணி, டெல்லியை துரத்தும் துரதிர்ஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இருபதுக்கு -20கிரிக்கெட்டில் அதிரடி காட்டக் கூடிய மெக்ஸ்வெல், முன்ரோ, கிறிஸ் மோரிஸ், இந்திய இளம் வீரர்கள் ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டெல்லி அணியின் துருப்பு சீட்டுகளாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் 4 வெளிநாட்டு வீரரை மட்டுமே இறக்க முடியும் என்பதால் ரபடா, டிரென்ட் பெல்ட் ஆகியோரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
நியூஸிலாந்து அணித் தலைவர் வில்லியம்சனின் தலைமையிலான ஐதராபத் அணிக்கு ஆணிவேராக இருந்தவர் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் தான். அவரும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிங்கி எடுக்கும் ஓட்டங்களே அணியின் வெற்றி வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்தது. பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் வோர்னருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, பிராத்வெய்ட், அலெக்ஸ் ஹாலெஸ், யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசன் ஆகியோரும், துல்லியமான பந்து வீச்சின் மூலம் மிரட்டக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், சுழற்பந்து வீச்சாளர் ரஷித் தான் உள்ளிட்டோரும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக தெரிகிறார்கள்.
ராஜஸ்தான் ரோயல்ஸ்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பெற்ற தடை, ராஜஸ்தான ரோயல்ஸ் அணிக்கு விழுந்த பெருத்த அடியாகும். அவருக்கு பதிலாக இப்போது ரஹானே தலைவராகியுள்ளார். அணியில் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், ஜோப்ரா ஆர்ச்சர், பென் லாக்லின், அங்கித் ஷர்மா, தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம் என்று பந்து வீச்சில் ராஜஸ்தான் ஓரளவு வலுவாகவே காணப்படுகிறது. ஆனால் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தவிர துடுப்பாட்டத்தில் அனுபவசாலிகள் அதிகம் பேர் இல்லாத குறையை சரி செய்ய வேண்டியதே ராஜஸ்தானுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM