தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்பு தான் ஆட்சி செய்யும். காவிக்கு இங்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தின் உணர்வை புரிந்து ஐ.பி.எல். நடத்தலாமா வேண்டாமா என்பதை பி.சி.சி.ஐ. முடிவு செய்ய வேண்டும். 

சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ. தான் முடிவு செய்யும். ஐ.பி.எல். போட்டியை நடத்துவது மாநில அரசு அல்ல, பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் தமிழக அரசின் கடமை. 

தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும் காவிக்கு இங்கே இடமில்லை. நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 

ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளார். இதில் அரசுக்கு எந்த சம்பந்தமுமில்லை. தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. ’ என்றார்.