சமாதானத்திற்காக சர்வதேச சட்டம் இலங்கை சிவில் சமூகம் முன்மொழிவு 

Published By: Priyatharshan

06 Apr, 2018 | 02:23 PM
image

' யொவுன் புரய " சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி , பிரதமர் , அரச பிரதிநிதிகள் , இளைஞர் கழகங்கள் மற்றும் ஊடகங்கள் என சுமார் 7000 பேர் கலந்துக்கொண்டனர். 

மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் ' யொவுன் புரய " நிகழ்வுகள் இடம்பெற்றன. 

கொள்கை திட்டமிடல் மற்றும்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் சேர்ந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தது.

தேசிய அபிவிருத்தியில் இளைஞர்கள் பங்களிப்பு செய்யும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடாத்தப்படுகிறது. 

கலாசார மரபுரிமைகள் மற்றும் உலக சமாதானம் போன்ற துறைசார் கருத்தாடல்கள் இதன்போது இடம்பெற்றமை முக்கிய அம்சங்களாகும்.  

கொரியாவை தளமாகக்கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான எச்.டபிள்யூ.பி.எல்.  இதில் இணைந்துகொண்டது. 

இந்த நிகழ்வில்  இளைஞர்களிடையே சமாதானம் தொடர்பான செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில் 7000 பேர் சமாதான பிரகடனம் மற்றும் யுத்தத்தை நிராகரிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். 

ஐக்கிய நாடுகள் சபையும் இந்த திட்டத்தில் பங்காளியாக செயற்படுகின்றது. சமாதானத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச  சட்டத்தை ஏற்புடையதாக்கும் தீர்மானத்தை கடந்த மார்ச் 14 ஆம் 2016 இல் அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டமானது சர்வதேச சட்ட நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. இது யுத்த சம்பந்தமான செயற்பாட்டை தவிர்த்தல், சமாதானத்தை எட்டுதல் , சர்வதேச சட்டத்தை மதித்தல், இன, மத ஒற்றுமை, சமாதான கலாசாரம் எனும் அம்சங்கள் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. 

இலங்கையில் 2009 வரை 30 வருட காலம் யுத்த சூழல் இருந்துள்ளது.  எனவே இலங்கை மக்கள் யுத்தம் பற்றி நன்கு அறிவர்.

மீண்டும் யுத்தம் ஏற்பட ஒருவரும் விரும்பவில்லை. எனவே இதன்படி  இந்த சட்டத்தை  இலங்கையில் சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும். இத்தகவல் இளைஞர் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்ல முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப் பணிப்பாளர் பிரபாத் லியனகே வலியுறுத்தினார். 

இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். எச்.டபிள்யூ.பி.எல் உடன் இணைந்து  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்வுகளை  ஏற்பாடு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

இரண்டாவது வருடாந்த டி.பி.சி.டபிள்யூ மகாநாடு கொரியாவில் அண்மையில் நடைபெற்றது. சமாதான எதிர்ப்பு நிகழ்வுகளிற்கு எதிரான எச்.டபிள்யூ.பி.எல். அலுவலக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

யொவுன் புரய இளைஞர் திருவிழாவில் இலங்கையின் சகல மட்டத்தில் இருந்தும் தலைவர்கள் பங்கேற்றனர். இதன்போது சமாதான ஊர்வலங்கள்  இடம்பெற்றது. இதில் சமாதானத்திற்கு எதிரான நிகழ்வுகளிற்கு  எதிர்ப்பும் சர்வதேச சட்டத்தை சமூக நீதிக்காக முன்மொழிவு போன்றன வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10