பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களை  அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார் என அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனைவரையும் தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள அமைச்சர் பிரதமரிற்கு எதிராக வாக்களித்தவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியை சந்தித்து பதவி விலகுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன் செனிவரட்ன கட்சி எடுத்த முடிவின் அடிப்படையிலேயே நாங்கள் வாக்களித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.