பூமிக்கு அச்­சு­றுத்­த­லா­க­வுள்ள எரி­கற்­களை விண்­வெ­ளியில் வைத்து தகர்க்கும் வகையில் தமது அணு­சக்தி ஏவு­க­ணை­களை தர­மு­யர்த்த ரஷ்ய விஞ்­ஞா­னிகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

தமது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஐ.சி.பி.எம். ஏவு­க­ணை­களை மேற்­படி எரி­கற்­களை தகர்ப்­ப­தற்­கு­ரிய வகையில் மேம்­ப­டுத்த ரஷ்ய விஞ்­ஞா­னிகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக ரஷ்ய செய்தி முகவர் நிலை­ய­மான டாஸ் தெரி­விக்­கி­றது.

20 மீற்­ற­ரி­லி­ருந்து 50 மீற்றர் வரை­யான அள­வு­டைய எரி­கற்களை தகர்க்­க­க் கூ­டிய வகையில் ரஷ்ய ஏவு­க­ணைகள் வலி­மை­யூட்­டப்­ப­ட­வுள்­ள­தாக அந்த செய்தி முகவர் நிலையம் கூறு­கி­றது.

இந்­நி­லையில் எதிர்­வரும் 2036 ஆம் ஆண்­டில்­ அ­பா­ய­க­ர­மான முறையில் பூமியை மிகவும் அண்­மையில் கடந்து செல்­ல­வுள்ள 99942 அபோபிஸ் விண்­கல்லை இந்த ஏவு­கணை மூலம் தாக்கி தகர்க்க ரஷ்ய விஞ்­ஞா­னிகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனினும் பல மில்லியன் செலவுமிக்க மேற்படி திட்டத்தை முன்னெடுக்க ரஷ்ய விஞ்ஞானிகள் உலக நாடுகளின் அனுமதியைப் பெறுவது அவசியமாகவுள்ளது.