அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இடம்பெற்றுவரும் 21 ஆவது பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டுப் போட்டி (கொமன்வெல்த் விளை­யாட்டு) இலங்கைக்கு முதலாவது பகத்கம் கிடைத்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் சதுரங்க லக்மால் ஜயசூரிய இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இப் போட்டியில் மலேசியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளதுடன் இந்தியா வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

6600 வீர, வீராங்­க­னைகள் போட்­டி­யி­ட­வுள்ள பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டுப் போட்டி (கொமன்வெல்த் விளை­யாட்டு) அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­கி இடம்பெற்று வருகின்றது. இம்­முறை நடை­பெ­ற­வுள்ள போட்­டி­களில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் சரி­ச­ம­மான தங்­கப்­ப­தக்­கங்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா இம்­முறை 21ஆவது தட­வை­யாக கோல்ட் கோஸ்டில் நடை­பெ­று­கின்­றது.

இம்­முறை இலங்கை 13 வகை­யான போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றது. இதற்கு மொத்தம் 80 வீரர்கள் வரை வருகை தந்துள்ளனர். பயிற்­சி­யா­ளர்­க­ளுடன் சேர்த்து மொத்தம் 150 பேர் இம்­முறை போட்டித் தொடரில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

இதில் மெய்­வல்லுநர் போட்­டி­களில் 13 வீரர்­களும், பளு­தூக்கல் போட்­டி­களில் 11 பேரும், மல்­யுத்தம் 6, எழுவர் றக்பி 12 வீரர்களையும் கொண்ட அணி­களே அதிக வீரர்களை உள்ளடக்கி இம்முறை போட்டிகளில் கலந்­து­கொள்­கின்­றன.

கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய பொதுநலவாய விளையாட்டு விழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 15 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. 

இதில் மொத்தம் 25 வகையான விளையாட்டு பிரிவுகளில் 275 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரையில் நடைபெற்றுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலின் அடிப்படையில் 852 தங்கப்பதக்கங்களுடன் 2218 மொத்தப் பதக்கங்களைப் பெற்று அவுஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 669 தங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், கனடா 469 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.