ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இராஜினாமா செய்யப்போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாகவும் தனது பதவி விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.