இலங்­கைக்கு எதி­ரான தொடரை வென்­றதன் மூலம் இந்­தியா, ஐ.சி.சி. இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரி­சையில் முத­லி­டத்தை தக்க வைத்துக் கொண்­டுள்­ளது.

இலங்­கைக்கு எதி­ரான தொட­ருக்கு முன்­னதாக 120 புள்­ளிகள் பெற்­றி­ருந்த இந்­தி­யாவின் புள்ளி எண்­ணிக்கை 122 ஆக உயர்ந்­துள்­ளது. 3ஆவது இடத்தில் இருந்த இலங்கை 5ஆவது இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­தியா (122) மேற்­கிந்­தியா (118) இங்­கி­லாந்து (117) நியூ­ஸி­லாந்து (116) இலங்கை (116) தென்­ஆ­பி­ரிக்கா (115) பாகிஸ்தான் (113 அவுஸ்­தி­ரே­லியா(110) ஆப்­கா­னிஸ்தான் (80) பங்களாதேஷ் (64) ஆகியன முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.