முஸ்லிம்களின் வேதனையை கொண்டாட்டமாக பார்க்கும் கூட்டுஎதிரணி ; ஹக்கீம்

Published By: Priyatharshan

04 Apr, 2018 | 06:34 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

கண்டி திகன வன்முறை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களின் வேதனையை கொண்டாட்டமாக பார்கின்றனர். இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பழிக்கடாவாக்க முற்பட்டமை கேவலமான செயற்படாகும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எனக்கு 24 வருட பாராளுமன்ற அனுபம் உள்ளது. இதன்படி நான் பல நம்பிக்கையில்லா பிரேரணைகளை பார்த்துள்ளேன். எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கும்போதே காற்று இறங்கிய நம்பிக்கையில்லா பிரேரணையாகும்.

லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் அஷ்ரப் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. அது மிகவும் காரசாரமான முறையில் இருந்தது. என்றாலும் இந்த பிரேரணையின் ஊடாக ஒரு நல்ல விடயம் நடந்துள்ளது. அதாவது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த முரண்பாடுகளும் பிளவுகளும் முற்றுப்பெற்றுள்ளன. அது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

மத்திய வங்கியில் மோசடி நடந்துள்ளது. எனவே இது  தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோப் குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். நான் பிரதமரின் ஆதரவாளன். எனினும் கோப்குழு அறிக்கைக்கு கையொப்பமிட்டேன். அங்கு பிரச்சினையிருப்பதை நாம் ஒத்துக்கொள்கின்றோம். அதற்கு ஒரே தடவையில் பிரதமருக்கு விரல்நீட்ட முடியாது. 

அத்துடன் சிறிமாவோ பண்டாநாயக்கவின் ஜே.ஆர் ஜயவர்தன பிரஜாவுரிமையை நீக்கினார். ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்தே இவ்வாறு செய்தார். அது போன்றே தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க இறங்கக்கூடாது என்பதற்கான சதித்திட்டமே நம்பிக்கையில்லா பிரேரணையாகும்.

எவ்வாறாயினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக அரசாங்கம் மேலும் பலமாகும். நாமும் அதற்கு உதவுவோம். அத்துடன் கண்டி திகன சம்பவத்தின் எமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்திருந்தார். எனினும் அதனை காரணம் காட்டி எம்மை பழிக்கடாவாக மாற்ற பார்கின்றனர். இந்த வன்முறை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களின் வேதனையை கொண்டாட்டமாக பார்கின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பழிக்கடாவாக்க முற்பட்டமை கேவலமான செயற்படாகும். 

சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்தாததால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட தீமை அதிகமானது. அவை சீர்செய்யப்படவேண்டும். இது தொடர்பாக நான் பிரதமருடன் முரண்பட்டுள்ளேன். என்றாலும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22