தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று  காலை நடுக்குடா பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

பேசாலை நடுக்குடா பகுதியில் கைவிடப்பட்ட கடற்படை முகாமில்  இருந்தே குறித்த வெடி பொருட்களை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நடுக்குடா பகுதியில் கைவிடப்பட்ட குறித்த கடற்படை முகாமினை சோதனையிட்ட போது ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயண் படுத்தப்படும் உயிர் உள்ள 1,405 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ரவைகள் எப்படி வந்தது என்பது தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.