அவுஸ்­தி­ரே­லியா இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்­டங்­களால் வெற்றி

Published By: Raam

16 Feb, 2016 | 07:51 AM
image

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றுள்­ளது.

இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான இரண்டு போட்­டி­களை கொண்ட டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி வெலிங்­டனில் நடை­பெற்­றது.

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­சி­லாந்து முதல் இன்­னிங்ஸில் 183 ஓட்­டங்­க­ளையும் அவுஸ்­தி­ரே­லியா 562 ஓட்­டங்­க­ளையும் பெற்­றி­ருந்­தன.

379 ஓட்­டங்கள் பின்­தங்­கிய நிலையில் 2ஆவது இன்­னிங்ஸை ஆரம்­பித்த நியூ­ஸி­லாந்து மூன்றாம் நாள் ஆட்டம் நிறை­வுக்கு வந்­த­போது 4 விக்கெட்டுக்கள் இழப்­புக்கு 178 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த நிலையில் நான்காம் நாள் ஆட்­டத்தை தொடர்ந்­தது.

கோரி அட்­ட­னர்சன் ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழந்தார். தொடர்ந்து வட்லிங்(10), நிக்கோல்(59), பிறஸ்வெல்(14), சௌதி(48), போல்ட்(12) என சீரான இடை­வெளியில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க முடி­யாது அரங்கு திரும்­பினர். நியூ­ஸி­லாந்து 104.3 ஓவர்­களில் 327 ஓட்­டங்­களுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

அவுஸ்­தி­ரே­லிய பந்து வீச்சில் நெதன் லயன் 4 விக்­கெட்­டுக்­க­ளையும், மிச்சல் மார்ஷ் 3 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர். போட்­டியின் ஆட்­ட­நா­ய­க­னாக வோகஸ் தெரி­வானார்.

இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் அவுஸ்­தி­ரே­லியா 1-–0 என்ற கணக்கில் முன்­னி­லையில் உள்­ளது. 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் எதிர்­வரும் 20ஆம் திகதி கிறிஸ்ட் சேர்ச்சில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41