மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில்  சற்றுமுன் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலநறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த  காரானது தமது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காரில் பயணம் செய்த மூவரில் இருவர் படு காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.