கணவன் மாரடைப்பால் மரணம் : துயர் தாழாத மனைவி தற்கொலை!!!

Published By: Digital Desk 7

04 Apr, 2018 | 02:37 PM
image

கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி, தேவசேனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரமணி மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தேவசேனா துக்கத்தில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டிலிருந்த உறவினர்கள் அனைவரும் தூங்கிய பின், தேவசேனா வீட்டிலிருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடிந்ததும் தேவசேனாவை காணாததால் உறவினர்கள்  எதேர்ச்சையாக வீட்டிலுள்ள கிணற்றில் பார்த்த போது தேவசேனாவின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது.

விடயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேவசேனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர்.

கணவரின் பிரிவைத் தாங்க முடியாததால் தேவசேனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47