மெக்­ஸிக்­கோவில் இடம் பெற்று வரும் போதை­வஸ்துக் கடத்தல் நட­வ­டிக்­கைகள் குறித்து பாப்­ப­ரசர் பிரான்சிஸ் கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

மெக்­ஸிக்­கோ­வுக்கு விஜயம் செய்­துள்ள அவர் அந்­நாட்டின் தலை­ந­கரின் புற­ந­கரப் பகு­தி­யான எகா­தெ­பெக்கில் இடம்­பெற்ற திறந்­த­வெளி ஆரா­தனை நிகழ்வில் 300,000 க்கும் அதி­க­மான பார்­வை­யா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

1.6 மில்­லியன் பேரை சனத்­தொ­கை­யாகக் கொண்ட எகா­தெபெக் போதை­வஸ்து வன்­மு­றைகள், கடத்­தல்கள், குழு ரீதி­யான படு­கொ­லைகள் – குறிப்­பாக பெண்­களின் படு­கொ­லை­க­ளுக்குப் பிர­சித்தி பெற்ற சர்ச்­சைக்­கு­ரிய பிராந்­தி­ய­மாக விளங்­கு­கி­றது.

இந்­நி­லையில் அங்கு உரை­யாற்­றிய பாப்­ப­ரசர், போதை­வஸ்து கடத்தல் செயற் ­பா­டு­களை முடி­வுக்கு கொண்­டு­வந்து துன்­பப்­படும் பொது­மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க மெக்­ஸிக்கோ தலை­வர்கள் வழி­வகை செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

போதை­வஸ்து கடத்­தலை ஒரு புற்­று­நோ­யெனக் குறிப்பிட்ட பாப்பரசர், அது மெக்ஸிக்கோ சமூகத்தையே அழித்துவிடக்கூடிய அபாயமிக்கது என்று கூறினார்.