சமூக வலைத்தள தோழியான இளம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த பெண்!!!

Published By: Digital Desk 7

04 Apr, 2018 | 01:10 PM
image

மெக்சிகோவில் இளம் கர்ப்பிணி பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கழுத்தை நெரித்து கொலை செய்து பெண் ஒருவர் குழந்தையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் பேர் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் 20 வயதேயான ஜெசிகா கேபரிலா என்ற இளம் நிறைமாத கர்ப்பிணிக்கு சமூக வலைதளம் வாயிலாக சிந்தியா ஃபாத்திமா என்ற பெண்மணி ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. 

சம்பவத்தன்று ஜெசிகாவை தமது குடியிருப்புக்கு அழைத்த சிந்தியா பிறக்கவிருக்கும் குழந்தைக்கான உடைகள் தருவதாக கூறியுள்ளார். தோழமையாக பழகியதால் ஜெசிகாவும் சிந்தியாவை நம்பி அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஜெசிக்காவை தமது குடியிருப்புக்கு வரவழைத்த சிந்தியா அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.பின்னர் அவரது வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

பின்னர் ஜெசிகாவின் உடலை மறைக்க  முயன்றும் முடியாமல் போகவே அவர்களது குடியிருப்பில் ஒரு அறையிலேயே மறைத்து வைத்து உள்ளார்.  

சிந்தியாவின் கணவர் நாட்டின் வேறு ஒரு பகுதியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த போது கர்ப்பமாக இருந்த சிந்தியாவுக்கு பிறந்த குழந்தை இறந்து போயுள்ளது. கணவரிடம் இதை மறைத்த சிந்தியா தமது தோழி ஜெசிகாவின் குழந்தையை பறிக்க திட்டமிட்டு அவரை கொலையும் செய்துள்ளார்.

ஜெசிகாவின் நட்புக்கு முன்னர் பலமுறை சமூக வலைதளத்தில் சிந்தியா கர்ப்பிணி பெண்களின் நட்பு கோரியுள்ளதும் பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17