முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. 

குறித்த விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.