பாகிஸ்தானில் இராணுவ நீதிமன்றம் 10 பயங்கரவாதிகளுக்கு  விதித்த மரண தண்டனையை அந்நாட்டின் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய 10 பயங்கரவாதிகளுக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த 10 பயங்கரவாதிகள் மீதும் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தாக்குதல் நடாத்தியமை, பிரபல இசைக்கலைஞர் அம்ஜத் சப்ரியை கொலை செய்தமை, ஆயுதப் படை மீது தாக்குதல் நடத்தி 17 அதிகாரிகளைக் கொன்றமை என இதுவரை 62 கொலை குற்றங்கள் பதிவாகியுள்ளது.