அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூடியுப் தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
பெண்ணொருவர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டபின்னர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நசீம் அக்டம் என்ற பெண்மணியே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட பெண்மணியின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர் கைத்துப்பாக்கியுடன் வந்துள்ளார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இதுவரை இந்த சம்பவத்தின் பின்ணணி குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நின்ற நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுகின்றது என்பதை நாங்கள் முதலில் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான சம்பவங்கள் இங்கு நடக்கும் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்காததால் நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம். முதலில் நான் பலூன் வெடிக்கின்றது என நினைத்தேன் பின்னர் பலூன் வெடிப்பதற்கான தேவையில்லையே என நினைத்தேன். அதன் பின்னர் பல சத்தங்கள் கேட்டன அதனை தொடர்ந்து அனைவரும் அஙகிருந்து ஓடத் தொடங்கினர் என அவர் தெரிவித்துள்ளார்.சம்பவத்தின் பின்னர் பணியாளர்கள் வெளியேற்றம்படும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.