சாரதிகளுக்கு வருகிறது ஆப்பு.!

Published By: Robert

04 Apr, 2018 | 11:12 AM
image

தமிழ் –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதியில் குடிபோதையில் வாகனம் செலுத்­து­வோரைக் கைது செய்ய விசேட நட­வ­டிக்கை ஒன்று எதிர்­வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந் நிலையில் இந் நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுக்க  குடி­போ­தையில் வாகனம் செலுத்தும் சார­தி­களின் அக்­குற்­றத்தை உறுதி செய்ய பயன்­ப­டுத்­தப்­படும் பலூன்கள் ஒரு இலட்சம் தரு­விக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அவை தற்­போது பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு கிடைத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

அதன்­படி அந்த பலூன்கள் நாளை முதல் தேவை­யான பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு விநி­யோகம் செய்­யப்­படும் எனவும் எதிர்­வரும் 7 ஆம் திகதி முதல் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சார­தி­களைக் கைது செய்யும் விசேட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­க­ப்படும் எனவும் அவர் தெரி­வித்தார்.

 கடந்த 2017 ஆம் ஆண்டு 2922 பாரிய விபத்­துக்கள் இடம்­பெற்­ற­தா­கவும் அதில் 3100 பேர் கொல்­லப்பட்­டுள்­ள­தாகவும் சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் பேச்­சாளர் அந்த ஆண்டில் மட்டும் 72819 பேர் குடி­போ­தையில் வாகனம் செலுத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்பட்­ட­தாக கூறினார். 

அவ்­வாறு அவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருக்காவிட்டால் விபத்­துக்கள் மற்றும் உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­ரித்­தி­ருக்கும் எனவும் அவர் கூறினார். அதனால் குடி போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46