போர் அச்சத்தை மீள உணர்த்தும் நிலக்கண்ணிவெடிகள் ! இன்று சர்வதேச நிலக்கண்ணிவெடிகள் ஒழிப்பு தினம்

Published By: Priyatharshan

03 Apr, 2018 | 05:16 PM
image

மூன்று தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு கோர யுத்தம் முடிவுற்ற நிலையிலும் கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக அதன் தாக்கம் வட,கிழக்கில் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக யுத்த பிரதேசங்களில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளின் அச்சம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமே காணப்படுகின்றது.

ஒரு நாட்டில் யுத்தம் இடம்பெற்றாலும் அதன் தாக்கம் அடுத்த தலைமுறையினருக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது . யுத்தத்தினை முழுமையாக முடிவிற்கு கொண்டு வந்துவிட்டோம் என எவரும் மார்தட்டிக் கொள்ள முடியாது. சிவில் யுத்தத்தின் மறைமுக தாக்கம் நிலக்கண்ணிவெடிகள் ஊடாக தொடர்கின்றது.

இன்று சர்வதேச நிலக்கண்ணி வெடிகள் ஒழிப்பு தினமாகும். இத்தினத்தினை முன்னிட்டு இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையானது எமது நாடும் அதன் தாக்கத்தினை முழுமையாக உணர்ந்துள்ளமையினை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. யுத்ததிற்கு பின்னரும் 54 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு வெடிபொருட்களால் மூடப்பட்டதாக காணப்படுகின்றது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் 2015 ஆம் ஆண்டு வரை நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படாமை சர்வதேச மட்டம் வரை பேசப்பட்டது.

இதன் பயனாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2016 ஆம் ஆண்டு கண்ணிவெடிகளையும் கொத்தணிக் குண்டுகளையும் தடைசெய்வதுடன் முற்றாக அழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. கண்ணிவெடி, கொத்தணிக்குண்டு தடை தொடர்பில் அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்குமாறு வேண்டி மீளிணக்கச் செயலணிச் செயலகத்திற்கு 2016 ஆகஸ்ட் 4 ஆம் திகதி கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான இலங்கை பிரச்சாரம் உட்பட இலங்கை பாதுகாப்பு சபை கோரிக்கைகளை முன்வைத்தது. குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் கடந்த மூன்று வருட காலமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாக காணப்படுகின்றது.

இன்றுவரை யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் கண்ணிவெடிகள் தொடர்பிலான அச்சத்திலே தமது அன்றாட வாழ்வினை நகர்த்தி வருகின்றனர்.யுத்தத்தின் பின்னர் கண்ணிவெடிகள் இதுவரை காலமும் முழுமையாக அகற்றப்படவில்லை .அகழ்வு பணிகளை அரசாங்கம் மேற்கொண்டாலும் அவை துரிதப்படுத்தப்படாமல் மந்தகரமான போக்கிலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

யாழ்ப்பாண பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தற்போது 91 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளது. இறுதிக்கட்ட போர் முல்லைத்தீவு பிரதேசத்தினை மையப்படுத்தி இடம் பெற்றமையால் அப்பகுதியில் அதிகளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முழுமைபெற்றுள்ளது. கண்ணிவெடிகள் இருப்பதாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் தற்போது 23கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த பிரதேசங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையின் காரணமாக கண்ணிவெடிகள் தொடர்பிலான விபத்துக்கள் குறைவான வீதத்திலே காணப்பட்டது. குறித்த விபத்துக்கள் கடந்த ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் 30தொடக்கம் 40 வரையிலான சதவீதத்தில் காணப்பட்டது.

கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உரிய செயற்திட்டங்களை செயற்படுத்தப்பட வேண்டும் .தற்போதும் அரசாங்கத்தில் புனர்வாழ்வு திட்டங்கள் நடைமுறையில் காணப்படுகின்றது. இருப்பினும் அவை எந்த அளவிற்கு முழுமைபெற்றுள்ளது என்பது சந்தேகத்திற்கிடமாகவே காணப்படுகின்றது.

யுத்தத்தை முடிவுறுத்துவது மாத்திரம் அல்லாது யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்வதும், பாதிப்புக்களை சீர்செய்வதும் பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகும் யுத்தத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தை எதிர்கொண்ட மக்கள் யுத்தத்தின் பின்னரும் அதில் இருந்து மீண்டபாடில்லை. மூன்று தசாப்தகால யுத்தத்தின் எச்சங்களான நிலக்கண்ணி வெடிகள் இன்றுவரை முற்றாக அகற்றப்படாதிருப்பது மக்களின் மனநிம்மதிக்கும் இன்றும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

(இராஜதுரை ஹஷான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மைக்காக மௌனமாக்கப்பட்டார்:பத்திரிகையாளர் சுகிர்தராஜனிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

2025-01-24 20:40:09
news-image

அமைதியான தொற்றுநோயாக  மாணவர்களிடையே காணப்படும் மனநலச்...

2025-01-24 13:53:49
news-image

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று...

2025-01-24 13:31:38
news-image

விவசாய தொழில்முனைவு / வேளாண்மை நோக்கி...

2025-01-23 16:12:24
news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15